Sivagangai

News June 10, 2024

சிவகங்கையில் 1908 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

image

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 11 மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. 1804 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 75 லட்சத்து 62ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1,908 வழக்குகள் நேற்று முடிக்கப்பட்டது.

News June 10, 2024

நடந்து சென்றவரை தாக்கியதால்  பரபரப்பு

image

தெற்குசந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கணேசன் (40).இவர் கீழ் மேல்குடி பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது கீழ் மேல்குடி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார்,சந்தோஷ், ஏ விளக்குளம் பகுதியைச் சேர்ந்த, புலிப்பாண்டி, ஆகியோர் கணேசனை வழி மறித்து சாதியை சொல்லி அவதூறாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்விடுத்ததாக3பேர் மீது டிஎஸ்பி கண்ணன் வழக்கு பதிவு செய்து இன்று விசாரித்து வருகிறார்.

News June 9, 2024

சிவகங்கை: 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில்
காவல்துறையில் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல்நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
டிஐஜி துரை பதவி உயர்வு வழங்கினார்.

News June 9, 2024

வரத்து குறைவு பச்சை மிளகாய் விலை கிடுகிடு

image

மழை காரணமாக பச்சை மிளகாய் வரத்து குறைந்து கொண்டே இருப்பதால், மார்க்கெட்டில் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் காரைக்குடி மார்க்கெட்டில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று விலை உயர்ந்து கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது . ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்ந்து உள்ளது. சுபமுகூர்த்தம், விசேஷ தினங்களால் இன்று மேலும் விலை வரை செல்ல வாய்ப்புள்ளது.

News June 8, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 8, 2024

சிவகங்கை: பத்மபூஷன் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அன்று
இந்திய அரசாங்கத்தால் மேன்மை பொருந்திய பணிகளுக்காக வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு (பத்ம விபுஷன் , பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) தகுதியுடையவர்கள் awards.gov.in மற்றும் padmaawards.gov.in தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

News June 8, 2024

சிவகங்கை: வெற்றிக்கு ‘கை’ கொடுத்த தொகுதி!

image

சிவகங்கையில் காங்., வெற்றிக்கு அதிக ஓட்டுகளை பெற்று தந்து அமைச்சர் பெரியகருப்பனின் திருப்புத்துார் தொகுதி, கார்த்தி சிதம்பரத்தின் வெற்றிக்கு ‘கை’ கொடுத்துள்ளது. சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4,27,677 ஓட்டுக்களை பெற்று 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கார்த்திக்கு அதிக ஓட்டு கிடைத்த சட்டசபை தொகுதி பட்டியலில் திருப்புத்துார் தொகுதி முதலிடம் பிடித்துள்ளது.

News June 7, 2024

சிவகங்கை கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை சேவைகள் வழங்கும் வரும்.ஜூன் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக மாவட்ட வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.

News June 7, 2024

கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை IV-கீழ், விவசாயிகளுக்கான இடைமுக பணிமனை நிகழ்ச்சியினை, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

News June 7, 2024

சிவகங்கை மாவட்டத்தில் மழை நிலவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில்
நேற்று காலை முதல் கன மழையின் அளவுகள் சிவகங்கை-24. 00மி. மீ மானாமதுரை 60.00மி.மீ இளையான்குடி-36. 00மி. மீ, திருப்புவனம்-40. 60மி. மீ, திருப்பத்தூர்-2. 50மி. மீ,
காரைக்குடி-6.80 மி.மீ, தேவகோட்டை -25.0மி.மீ, காளையார்கோவில்- 26.40மி.மீ, சிங்கம்புணரியில்-மழை பெய்ய வில்லை மொத்தம் 221.30 மி.மீ மழை சிவகங்கை மாவட்டத்தில் பெய்துள்ளது.

error: Content is protected !!