Sivagangai

News April 18, 2024

 மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை

image

சிவகங்கை மாவட்டத்தில் மழை நீர் முழுமையாக பயன்படுத்தப்பட வில்லை. நீர் வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது , ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து போதிய அளவில் இல்லை. எனவே கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News April 17, 2024

சிவகங்கை: 2 நாட்கள் மதுபானக்கடைக்கு விடுமுறை

image

மகாவீர் ஜெயந்தி தினம் மற்றும் மே தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், எப்எல் 2, எப்எல்3 உரிமங்கள் உள்ள ஓட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் ஆகியவை 2 நாட்கள் மூடப்படும். இந்த தினங்களில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

சிவகங்கை: தேர்தல் விதிமீறல் வழக்கு நிலவரம்

image

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பல்வேறு தேர்தல் விதிமுறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் வாகனங்களில் பிரசாரம், சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் தொடா்பாக திமுக, காங்கிரஸ், பாஜக, நாம்தமிழர் உள்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மீது இதுவரை 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

News April 16, 2024

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து.

image

திருப்புவனம் அருகே கமுகேர்கடை நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. தனியார் பேருந்து முன் பக்கம் சேதமானது. பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இரண்டு பேருந்துகளையும் திருப்புவனம் காவல்துறை கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

News April 16, 2024

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு

image

சிவகங்கை மாவட்டம் மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தினால் தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு செலவின பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்கள் ஆஷா அஜீத் (சிவகங்கை), மெர்சி ரம்யா (புதுக்கோட்டை), ஆகியோர் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

சிவகங்கை: நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று ஏப்.19ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது  உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு,  தொழிலாளர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், 04575-240521 மற்றும் 98941 60047 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 16, 2024

சிவகங்கை: கார்த்திக் சிதம்பரம் மனைவி வழக்கு பதிவு

image

கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி இன்று மானாமதுரை காந்தி சிலை பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வாங்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. மானாமதுரையில் நகராட்சியில் உள்ள வார்டுகளில் கார்த்திக் சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News April 16, 2024

சிவகங்கையில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை

image

சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 15, 2024

சிறப்பு அஞ்சல் வாக்குப்பதிவு நீட்டிப்பு

image

மக்களவைத்  தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்துவதற்கு ஏதுவாக  வரும் நாளை வரை சிறப்பு அஞ்சல் வாக்குப்பதிவு  நீட்டிக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு 30 பேர் தேர்வு

image

சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகத்தினரால் சிவகங்கை திறந்த வெளி விளையாட்டரங்கத்தில் ஜூனியா் பிரிவுக்கான (18வயதுக்கு கீழ்) முன்னோட்டத் தோ்வு நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். தேர்வான மகளிர் அணிக்கு ஏப்.,23, 27 வரையும், ஆடவர் அணிக்கு ஏப்.,28, மே.2 வரையும் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

error: Content is protected !!