Sivagangai

News June 22, 2024

சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிக்கு நிலையான பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஜூன் 22) நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

News June 22, 2024

சிவகங்கையில் இரவு மழை பெய்ய வாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News June 22, 2024

சிவகங்கை: முதிர்வுத்தொகைபெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கையில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 2001-2006 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து, 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளிடமிருந்து முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம், ஆவணங்களை ஜூன்.29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிா்வுத்தொகை

image

 முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து விண்ணப்பித்து 18 வயது நிறைவடைந்தும் முதிா்வுத்தொகை கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளிகள், வைப்பு நிதிப் பத்திரம் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

சிவகங்கை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது .சிவகங்கை ஆட்சியர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் இன்று (ஜூன்.21) நடைபெற உள்ளது.

News June 20, 2024

சிவகங்கை மாவட்டத்தில் நாளை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவதுசிவகங்கை ஆட்சியர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நாளை (ஜூன்.21) நடைபெற உள்ளது.

News June 20, 2024

சிவகங்கை: ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடு பெறலாம்

image

தபால் நிலையங்களில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடாக ரூ.10 லட்சம் வரை பெறலாம் என சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார். 18 முதல் 65 க்கு வயதுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.520 செலுத்தி விபத்து காப்பீடு பெறும் வசதி தபால் துறை மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு, மாவட்ட அளவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஜூன் 20, 21ல் சிறப்பு முகாம் நடைபெறும்.

News June 19, 2024

சிவகங்கையில் ரூ.5க்கு 25 லிட்டர் தண்ணீர்

image

சிவகங்கையில் கோடையில் குடிநீர் தாகம் தீர்க்க ஆயுதப்படை மைதானத்தில் அமைத்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அப்பகுதி மக்களுக்கு கைகொடுத்து வருகிறது. இங்கு, போலீசாரின் குடும்பத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளனர். போலீசாரின் குடும்பத்தினருக்கு 25 லிட்டர் தண்ணீருக்கு ரூ.5, பொதுமக்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

News June 18, 2024

சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற ஜூன் 21ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடுநாடுபவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜுன் 21ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!