Sivagangai

News October 24, 2024

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

image

திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் இன்று மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கேஆர். பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் பி.மூர்த்தி, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

News October 24, 2024

சிங்கம்புணரி: பச்சிளம் குழந்தை கழுத்தறுப்பு, இருவர் கைது

image

சிங்கம்புணரியை சேர்ந்தவர் மகேந்திரன்(45) இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கினார். சிறுமி 18 வயதை கடந்த நிலையில், அவருக்கு அக்-22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண் யாருக்கும் தெரியாமல், தனக்குத் தானே பிரசவம் பார்த்தார். பின் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், குழந்தை கை, கழுத்தை கத்தியால் அறுத்து, மகேந்திரன் வீட்டின் முன் போட்டார். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News October 23, 2024

ஒடிசாவை சேர்ந்தவரிடம் ரூ.6 கோடி மோசடி

image

ஒடிசாவை சேர்ந்தவர் குண்டல். இவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.6 கோடி வரை ஒரு கும்பல் மோசடி செய்தது. இதுகுறித்து ஒடிசா போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிலரது வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. இதில் பல லட்சம் ரூபாயை காரைக்குடி,தேவகோட்டயை சேர்ந்த 4 பேரின் வங்கி கணக்கிற்கு வந்துள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News October 23, 2024

மாவட்டம் முழுவதும் 163 (144) தடை உத்தரவு அறிவிப்பு

image

வருகிற 24 ஆம் தேதி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் 223 வது நினைவு தினம் அரசு சார்பிலும், 27ம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பிலும் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், முழுவதும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆட்சியர் 163(144) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 23, 2024

சிவகங்கையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு

image

சிவகங்கை திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 223 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்துார் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, சிவகங்கை டவுன், மதகுபட்டி மதுபானக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக 23.10.2024 அன்று பிற்பகல் 06.00 மணி முதல் 24.10.2024 வரை முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

மானாமதுரை வழியாக செல்லும் அம்ரித் பாரத் ரயில் 

image

தமிழகத்தில் புதிய ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் சேவை தொடங்கப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி – ஷாலிமர் மற்றும் தாம்பரம் – சந்திரகாசி ஆகிய இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும். திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில் விருதுநகர், மானாமதுரை ,சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய வழியாக சென்னை செல்லும் நிலையில் இது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்ரிற்கு வரவுள்ளது.

News October 23, 2024

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகள் பயனடைந்துள்ளனர்

image

சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 124 ஊராட்சிகளை சேர்ந்த 263 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர். காளையார்கோவில் வட்டாரத்தில் 43 ஊராட்சிகளிலும், மானாமதுரை வட்டாரத்தில் 39 ஊராட்சிகள் மற்றும் தேவகோட்டை வட்டாரத்தில் 42 ஊராட்சிகள் என மொத்தம் 124 ஊராட்சிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

குழந்தை கழுத்து அறிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை

image

சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ஆண் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கட்டுமானத்திற்கு குவிக்கப்பட்ட மணலில் குழந்தையின் கழுத்து, கை நரம்பு அறுபட்டு (அக்.222) தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான சிங்கம்புணரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2024

நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

News October 22, 2024

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் இன்று தெரிவித்துள்ளார்.