India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோர் சிவகங்கை பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளனர். விரிவாக்கப் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி ஆகியோர் இன்று (ஜூலை.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மக்களே பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தை சேர்ந்த முருகன் விஏஓ முருகன் நேற்று (ஜூலை07) அதிகாலை தனது மனைவி, 2 மகள்களுடன் இளையான்குடி அருகே கோட்டையூர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது. இதில் மனைவி, மகள் பலியானர். முருகன் மற்றொரு மகளுக்கு சிறிய காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், அந்த சிபிஐ வழக்கை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகங்கைக்கு 46 காலிப் பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும்.இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்:ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண்.<<16974387>>மேலும் அறிய.<<>>
சிவகங்கை மாவட்டத்தில் 46 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா இன்று (ஜூலை 6) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காணாமல் போனது என் அம்மாவின் நகை தான், அவர் வயதானவர். மேலும், அவரால் காவல் நிலையத்திற்கு அடிக்கடி அலைய முடியாது என்பதால் தான் நான் புகார் எழுதிக் கொடுத்தேன். காணாமல் போன நகை தனது தாயார் உடையது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியைச் சேர்ந்த கோபிநாத் தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று தேவகோட்டை வட்டம் புளியால் அருகே சிலை மாநாடு என்ற இடத்தில் காரை ஓட்டி வரும்போது கார்நிலை தடுமாறி சாலையின் ஓரமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கோபிநாத் தாயார் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 2025 மூன்றாம் வாரம் வரை மொத்தம் 215 முகாம்கள் மூன்று கட்டங்களாக காரைக்குடி மாநகராட்சியில் 27 முகாம்களும், சிவகங்கை, தேவகோட்டை, மானமதுரை ஆகிய நகராட்சிகளில் 31 முகாம்களும், 22 பேரூராட்சிகளில் 11 முகாம்களும் 12 சாதாரண ஊராட்சிகளில் 129 முகாம்களும் 3 புறநகர் ஊராட்சிகளில் 6 முகாம்களும் நடைபெற உள்ளது.
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இங்குள்ள சத்ரு சம்ஹார வேல் கோயிலின் சிறப்பு. கடன், பிணி நீங்க, எதிரிகள் தொல்லை அகல, ராகு தோஷம் விலக இங்கு வழிபடலாம். பேசாத குழந்தைகள் பேச, பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர, நீதி பெறவும் இக்கோயில் பிரசித்தி பெற்றது. இதை *SHARE* பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.