India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவகோட்டை நகைக்கடை பஜாரில் நேற்று (ஞாயிறு) இரவு 10 மணிக்கு மேல் பிறந்து ஒருவாரம் ஆன பெண் குழந்தை சாலையோரத்தில் கிடந்துள்ளது. அந்த வழியே சென்றவர்கள் சாலையில் கிடந்த குழந்தையை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியர்களிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பெண் குழந்தை குறித்து தேவகோட்டை டவுன் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 28.03.25 அன்று முற்பகல் 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து, அதிகவெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள்,முதியோர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள வழிமுறைகளாக நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும் உள்ளிட்ட உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்
சிவகங்கை, சித்தலுார் விலக்கு வேதமுடைய அய்யனார் கோயில் அருகே ஒரு கும்பல் சந்கேத்திற்கு இடமளிப்பதாக கூடியிருந்தது. இதுகுறித்து சிவகங்கை போலீசாருக்கு தகவல் கிடைத்து இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆயுதங்களுடன் இருந்த 5 பேரைக் கைது செய்து விசாரித்ததில், பனையூர் தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளையடிக்கச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
சிவகங்கை கண்டுபட்டியில் மேற்கூரை கூட அமைக்கப்படாமல் அமைந்துள்ளது குடியிருப்பு காளியம்மன் கோயில். அம்மனின் வலது புறத்தில் புற்றும், இடதில் துர்க்கையம்மன் சன்னதியும், எதிரே 500 ஆண்டு பழமையான நாவல் மரமும் தல விருட்சமாக காட்சியளிக்கும்.முகத்தில் சரும பிரச்னை நீங்க கண்ணாடி கட்டுவதும், குழந்தை வரத்திற்கு முந்தானையை கிழித்து தொட்டில் கட்டுவதும், திருமணமாகாதவர்கள் வளையல் வாங்கி கட்டுவதும் ஐதீகமாக உள்ளது.
காரைக்குடி மாநகராட்சியில் ரூ.4 கோடியே 32 லட்சம் வசூலிக்க வேண்டியுள்ளது. வரி செலுத்துபவர்கள் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதிக்குள் வரி பாக்கி செலுத்தாதவர்களின் வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும் என கமிஷனர் சித்ரா எச்சரித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்துரை சேர்ந்தவர் பழனி என்ற பழனிச்சாமி.இவர் மீது 2023ம் ஆண்டு காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. அப்போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் சாட்சி சொல்ல வரவில்லை.இதை தொடர்ந்து அவருக்குப் பிடி வாரன்ட் பிறபித்து நீதிபதி உத்தரவிட்டார்.
காரைக்குடி மாநகராட்சியில் 100 சதவீத வரி வசூல் இலக்கை அடைய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.வரி கட்டாத கட்டடங்களுக்கு சீல் வைப்பது, வரிவசூல் செலுத்தாத வணிக வளாகங்கள் முன்பு குழி தோண்டுவது என பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் வரிபாக்கி செலுத்தாததாக கூறி ஜவுளிக்கடை முன்பு மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டியை வைத்தனர்.
தேவகோட்டையை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி. இவர் வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து வந்தார். மரத்தை வெட்டிய போது மரத்திலிருந்து வெளியேறிய மலை தேனீக்கள் காளிமுத்துவைக் கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது அவரது மனைவி, மகன் ஆகியோரை தேனீக்கள் கொட்டியது.இதில் ராஜா முகமது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் / படைப் பணியாற்றுவோர் / சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் (D.D.C Hall-ல்) வருகின்ற 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இன்று (மார்ச்.21) தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.