India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அழகப்பா பல்கலைக்கழகம் – லேர்நெட் திறன் வளர்ப்பு நிறுவனம் சார்பில் தீன் தாயாள் உபாத்யாய கிராமின் கெளசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிகள் காரைக்குடி அழகப்பா பல்கலையில் வழங்கப்படுகிறது. தங்குமிடம், உணவு முற்றிலும் இலவசம். கிராமப்புற கிறிஸ்துவ,இஸ்லாமிய இளைஞர்களுக்கு மட்டும் இந்த பயிற்சி. மேலும் தகவலுக்கு 9677946774 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். share it
புதுடெல்லி கேதார்நாத் சைனி ஆடிட்டோரியத்தில் நேற்று (மார்ச்.29) பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற சிவகங்கை ராணி “வேலு நாச்சியார்” அவர்களின் பெருமையை போற்றும் விதமாக வரலாற்று புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகங்கை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட, ஒன்றிய, மகளிர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரை செவென் ஹில்ஸ் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் சனிக்கிழமை 5.4.2025 அன்று காலை 9 மணி முதல் 2.30 மணி வரை காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் சிறுநீரக பாதிப்பு அதிகரித்துள்ளது. இது எதனால் வருகிறது என தெரியவில்லை.குடிநீர் காரணமா அல்லது தட்பவெப்ப நிலை காரணமா என தெரியவில்லை. சிவகங்கையில், டயாலிசிஸ் இயந்திரம் தொடர்ந்து கொடுத்தாலும், டயாலிசிஸ் மிஷின்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலைய துறையினர் மீட்டனர். இணை ஆணையர் பாரதி தலைமையில் மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம், சோலை குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள 13 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடங்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
பிள்ளையார்பட்டியில் பி.என்.பி. உழவர் பயிற்சி மையத்தில் இலவச தொழில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு நாள் பயிற்சியாக ஏப்.16, 17,19,29 ல் உணவு பொருட்கள் உரிமம் பெறுதல்,லேபிளிங்,பேக்கேஜிங், நாட்டுக்கோழி வளர்ப்பு, மாட்டு சாணம் மதிப்பு கூட்டல் உள்ளிட்ட பல பயிற்சி முகாம் நடைபெறும். விரும்புவோர் 94885 75716 OR 95784 99665 ல் அழைத்து பதிவு செய்யலாம். உங்க நண்பருக்கும் பகிரவும்.
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே போலீசாருக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட வீடுகளை போலீசார் வாங்கி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். வீடுகளைச் சுற்றிலும் அருகில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லை ஏற்பட்டு நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக இரயில் எண்-16103/16104, தாம்பரம்-ராமேஸ்வரம், பாம்பன் விரைவு ரயில் வரும் 06-04-2025 (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படவுள்ளது. இதனால் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வரும் பயணிகளுக்கும், ராமேஸ்வரம் வரும் பயணிகளுக்கும் வசதியாக அமையும் என்று மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை தொடங்கி மீண்டும் தனது நாட்டை பிடித்த முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியாருக்கு டெல்லியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வேலுநாச்சியாரின் வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் டெல்லி வந்தடைந்தார். அவரை பாஜக மஹிளா மோர்ச்சா சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகங்கை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் ஏப்.,16ல் காளையார்கோவில் தாலுகாவில் நடக்கிறது. இதற்காக ஏப்.,1 முதல் 14ம் தேதி வரை காளையார்கோவில் தாலுகாவில் உள்ள பேரூராட்சி,வி.ஏ.ஓ.ஊராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். ஏப்.16 அன்று நடக்கும் முகாமில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். அன்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.