Salem

News January 25, 2025

சேலத்தில் குழந்தை அடித்து கொலை; போலீசார் விசாரணை

image

குகைப் பகுதி சேர்ந்த பசுபதி -சண்முகப்பிரியா தம்பதியின் மூன்று வயது ஆண் குழந்தையை அவரது உறவினர் தமிழரசன் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனையடுத்து, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 25, 2025

“போதைப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள்”

image

சேலம் போலீசார் நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “say no to drugs”என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளனர். இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக போலீசார், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News January 25, 2025

கொலை வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

image

சேலம், மேட்டூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமு, சுரேஷ்குமார், பாலாஜி, சிவகுமார் முருகன், தினேஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் மேட்டூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உதய வேளவன் உத்தரவிட்டார்.

News January 25, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் உத்தரவின்படி,நீர், நிலம், காற்று, கடலில் நெகிழி கழிவுகளை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் உள்ள, மாநகராட்ச,6 நகராட்சி,32 பேரூராட்சி, 20 ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்திலும் இன்று (ஜன.25) ஒருநாள் நெகிழி கழிவுகளை சுத்தம் செய்யும் தினமாக கடைபிடித்து, அந்தந்த பகுதிகளில் நெகிழிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

News January 25, 2025

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் மாவட்டத்தில் ஜன.25 இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 8:30 மணிக்கு டாட்டா லைஃப் இன்சூரன்ஸ் விழிப்புணர்வு பேரணி. 2) காலை 8:30 மணிக்கு நெகிழி கழிவு தினத்தை ஒட்டி குமரகிரி ஏறியில் சுத்தம் அமைச்சர் ராஜேந்திரன். 3) காலை 9:30 மணி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மரம் நடுதல். காலை10 மணி எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாளை நலத்திட்ட உதவிகள். 5) மாலை 6 மணி ஏ வி ஆர் மண்டபத்தில் கம்பன் கழக விழா நடைபெறவுள்ளது.

News January 25, 2025

தொழிற்பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

பாரா தடகளப் போட்டியில் சேலம் வீரர்கள் சாதனை

image

மாநில அளவிலான பாரா தடகளப் போட்டி சென்னையில் கடந்த ஜன.21- ம் தேதி முதல் ஜன.23- ம் தேதி வரை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சார்பில் கலந்துக் கொண்ட பாரா வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்தமாக 2- ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சேலம் மாவட்ட பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

News January 25, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மாநகர காவல் துறை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைக்கான (ஜனவரி 24) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

News January 25, 2025

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்யும் நிகழ்வு 

image

சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகள் மற்றும் அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் நாளை நடைபெற உள்ளது. ஜனவரி-25 தேவையான நாளை பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தல் மற்றும் சேகரித்தல் நிகழ்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்

News January 24, 2025

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1200 கோடி கடன் 

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் ஆண்டில், சேலத்திலுள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு,ரூ.1602 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை ரூ.1200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள ரூ.402 கோடியை, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் துவங்க ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிட வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!