India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக வரும் பிப்.04- ஆம் தேதி முதல் பிப்.07- ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முகாம் நடைபெறும் நாட்களை அறிந்து, சேவைகளை விரைந்து பெற உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக செல்லும் சந்திரகாசி- மங்களூரு சென்ட்ரல்- சந்திரகாசி விவேக் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (22851/ 22852) 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 03- ஆம் தேதி அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்திய அரசமைப்பில் அடிப்படைக் கடமைகள்: உரிமைகளும் பொறுப்புகளும்’ என்ற தலைப்பில், மாநில அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில், சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 4-ம் ஆண்டு படிக்கும் இந்துஜா என்ற மாணவி, முதல் பரிசு வென்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரூபாய் 50,000 மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (30-1-2025) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
“கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். தற்போது சரியான தலைமை பண்பு இல்லாத காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறேன்” என நா.த.க.வின் முன்னாள் சேலம் தெற்கு மாவட்டச் செயலாளர் மா.தமிழரசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் உள்ள ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று (ஜன.29) மீனாட்சி என்கின்ற நாட்டு மாட்டிற்கு வளைகாப்பு நடைபெற்றது. மாட்டின் உரிமையாளர், பொதுமக்கள் கலந்து கொண்டு மாட்டின் கொம்பிற்கு வளைய அணிவித்தும், உணவளித்தும் வளைகாப்பை வெகு சிறப்பாக நடத்தினர். அத்துடன் மாட்டிற்கு புத்தாடை அணிவித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மக்களின் பிரச்சனைக்காக அறவழியில் போராடிய முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமாரையும், பொதுமக்களையும் கைது செய்ததற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் பிரச்சனைகளுக்காக அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
சேலம் அம்மாபேட்டையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட, புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையின் நிர்வாகி விஜயாபானுவின் கார் ஓட்டுநரான, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சையத் முகமது என்பவரின் வங்கிக் கணக்கில், ரூபாய் 84 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வார இறுதி நாட்கள், முகூர்த்தத் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (ஜன.31) முதல் பிப்.03 வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து பெங்களூரு, சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் சேலத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 26 பி.டி.ஓ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கெங்கவல்லி தாமரைச்செல்வி (கி.ஊ.) தலைவாசல்; இடைப்பாடி ஆரோக்கியநாதன் கென்னடி (வ.ஊ.) கொளத்தூர்; ஏற்காடு வாசுதேவ பிரபு (வ.ஊ.) மேச்சேரி (கி.ஊ.) ; கொங்கணாபுரம் பழனிசாமி (கி.ஊ.) ஓமலூருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.