Salem

News November 9, 2024

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம்!

image

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் சிறப்பு முகாம் வருகின்ற நவ.16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,264 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு!

image

தண்டவாளங்களில் பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் நவ.11, 15, 16, 18, 22, 24, 25, 29, 30 ஆகிய 9 நாட்கள் மட்டும் திருச்சிராப்பள்ளி- பாலக்காடு டவுன் ரயில் (16843) சூலூர் சாலை வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக, சூலூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

News November 8, 2024

மேட்டூர் அணையை தூர்வார அரசு திட்டம்

image

90 ஆண்டுகளில் முதல்முறையாக மேட்டூர் அணையைத் தூர்வார நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மேட்டூர் அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தூர்வார நீர்வளத்துறை திட்டம்; சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதியை பெறுவதற்கான ஆலோசகர்களை நியமனம் செய்ய டெண்டர் கோரியது; அணையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண் தூர்வார திட்டம்!

News November 8, 2024

அடுத்த மாப்பிளை நாங்க! வைரல் பேனர் 

image

சேலம், பெரிய சீரகாப்பாடியைச் சேர்ந்த மனோஜ்- எழிலரசி ஜோடிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இதில் மாப்பிள்ளையின் நண்பர்கள் வைத்த திருமண பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெயர், வயது, தொழில், ஊதியம், புகைப்படங்களுடன் “அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தால் தாங்க..பொண்ணு இருந்தால் மட்டும் போதும்” போன்ற வாசகங்களும் பேனரில் இடம் பெற்றிருந்தது.

News November 8, 2024

சேலம் வனத்துறை மூலம் இலவச செடிகள்

image

சேலம் வனத்துறை மூலம் கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீட்டுமனை விற்பனையாளர்கள்(Land Developers ) மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சேலம் வனத்துறை மூலமாக தேக்கு, மகாகனி, வேம்பு, ஈட்டி, வேங்கை போன்ற செடிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு – 8610608452 என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 8, 2024

3 சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

image

சேலம், தும்பல் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரசாந்த்தின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் விதமாக ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை இன்று (நவ.08) அமைச்சர் கே.என்.நேரு நேரில் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்வில். சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

News November 8, 2024

சேலம் அருகே ரவுடி வெட்டிக்கொலை

image

சேலம் வலசையூர் அருகே வெள்ளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவுடி சரவணன் (45) என்பவர் காரில் வெளியே செல்லும்போது பனங்காடு அருகே வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட சரவணன் பிரபல ரவுடி காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா? இல்லை முன்விரதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2024

பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட புறநகர் வழித்தடத்திற்கு 6 புதிய பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று (நவ.8) கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குநர் ஜோசப் டயஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News November 8, 2024

சேலத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

சேலம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் நாளை (நவ.9) நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இடம் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா முள்ளுவாடி கேட் அருகில் இலவசமாக நடைபெறுகிறது. தொடர்புகொள்ள: 9499933489

News November 8, 2024

தாரமங்கலம்: பள்ளியில் கிரிக்கெட் வீரர் நடராஜன்

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் தனது மகள் பிறந்தநாளை தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் நேற்று கொண்டாடினார். பள்ளி நிர்வாகிகள் லாரன்ஸ், ஜூலி ஆகியோர், நடராஜன் குடும்பத்தினரை வரவேற்று, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நடராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.