India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 114 சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, விருதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆனைப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை கேடயத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நவ.14- ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டம் தைலானுரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அய்யந்துறை இன்று சேலம் மத்திய சிறையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென்று பிளேடால் கை, கால்களில் அறுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிக்கு சேலம் மத்திய சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கொடுத்த மனுவை கவனக்குறைவால் கீழே போட்டுவிட்டு சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் மனு அளிக்க பொதுமக்களே எடுத்து வந்து மீண்டும் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் என கலெக்டர் உத்தரவு அளித்துள்ளார்.
சேலம் மத்திய சிறையில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிறைக் கண்காணிப்பாளர் வினோத் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டு, கதை, கட்டுரை, ஓவியம் மற்றும் அரங்கம் அமைத்த சிறை கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் சிலம்பரசன் கலந்து கொண்டு பேசினார்.
ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சிலர் சேலம் ஆட்சியரிடம் குறைதீர்க்கும் முகாமில் கொடுத்த மனு சின்ன சேலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் குப்பையில் கிடந்துள்ளது. இதனை அடுத்து மனுதாரர்கள் இச்சம்பவம் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் குறை தீர்ப்பு முகாமில் கொடுக்கப்பட்ட மனு குப்பையில் வீசி சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மாநகராட்சி பல்நோக்கு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திரன் ஊனமுற்றோர் என்ற பெயரை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று மாற்றியவர் கலைஞர். கடந்த மூன்று ஆண்டில் 82 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளார். எப்பொழுதும் திமுக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில், வரும் நவ.12-ஆம் தேதி முதல் ஜன.29- ஆம் தேதி வரை இயக்கப்படும் என சேலம் தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படும் கோவை- தன்பாத் சிறப்பு ரயில் (03326) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (நவ.9) மதியம் 12.55 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 11 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து, பைக் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், நல்லவாய்ப்பாக 20-க்கும் மேற்பட்ட பணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பைக்கில் சென்ற நபர் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் வழியாக கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவுக்கு இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் நவ12- ம் தேதி முதல் ஜனவரி 29-ம் தேதி வரை இயக்கப்படும். சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.