India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வழியாக செல்லும் சாம்பல்பூர்- ஈரோடு- சாம்பல்பூர் சிறப்பு ரயில்களில் (08311/08312) வரும் ஏப்ரல் முதல் மே 02- ஆம் தேதி வரை மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், ஸ்லீப்பர் பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.
சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ஈரோடு- நான்டெட் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07189/ 07190) வரும் மே மாதம் முதல் வாரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் ஏப்.09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கும், ஏப்.10, 17, 24, மே 01 தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் (01005/01006) இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மார்ச் 30- ஆம் தேதி காலை 08.00 மணிக்கு தொடங்கும்.
சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என சொன்னாலும், Google Pay பின் நம்பர் போன்ற எதையும் சொல்லக்கூடாது என வலியுறுத்தினர். சைபர் கிரைம் புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள்,அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மார்ச் மாதம் 27 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று (மார்ச் 27) 101.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் சேலத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்காத நிலையில் இந்த அளவிற்கு வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க முருகன் கோயில்கள் உள்ளன. முத்துமலை முருகன் கோயில், காவடி பழனி ஆண்டவர் கோயில், காளிப்பட்டி முருகன் கோயில், கந்தாஸ்ரமம் திருக்கோயில், குமரகிரி தண்டாயுதபாணி கோயில் ஆகியவை சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இதில், முத்துமலை முருகன் கோயிலில் உலகின் மிக உயரமான முருகன் சிலை உள்ளது. முருகன் 146 அடியில் பிரம்மாண்டமாக காட்சியளித்து அருள் புரிந்து வருகிறார். SHARE IT!
சேலம் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள முன்வராத காரணத்தால் 25 வாகனங்கள் மார்ச் 29 காலை 10.30 மணிக்கு சர்கார் கொல்லப்பட்டியில் உள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.