Salem

News August 13, 2025

சேலம்: இலவச பட்டா பெற இதை மட்டும் செய்தால் போதும்!

image

சேலம் மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

கோட்டை மாரியம்மனுக்கு மஹா நெய்வேர்த்தியம்

image

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆக.13) மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கும்பப் படையலிட்டு மஹா நெய்வேர்த்தியம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 13, 2025

சேலம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் முகாம்!

image

சேலம் ஆகஸ்ட் 14 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் முகாம்கள்:
▶️ அம்மாபேட்டை சமுதாயக்கூடம் புத்துமாரியம்மன் கோவில். ▶️மாசிநாயக்கன்பட்டி கஸ்தூரிபா திருமண மண்டபம் அயோத்தியாபட்டினம்.
▶️ தலைவாசல் விளையாட்டு மைதானம் காமகபாளையம்.
▶️மேச்சேரி சுய உதவி குழு கட்டிடம் ஓலப்பட்டி.
▶️காடையாம்பட்டி எஸ் எஸ் வி ஜமீன் மஹால் நடுப்பட்டி.
▶️சங்ககிரி நாடார் சமுதாயக்கூடம் வட்டமலை. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

News August 13, 2025

காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை!

image

நாட்டின் 79-வது சுதந்திர தின விழா வரும் ஆக.15- ஆம் தேதி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், சேலம் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

News August 13, 2025

சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து

image

அக்.11-ல் தன்பாத்- கோவை சிறப்பு ரயில் (03679), அக்.14- ல் கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680), அக.13- ல் ப்ரௌனி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (12521), அக்.17- ல் எர்ணாகுளம்-ப்ரௌனி எக்ஸ்பிரஸ் ரயில் (12522) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News August 13, 2025

சேலம்: VOTERS LIST-யில் பெயர் இருக்கா? உடனே CHECK

image

சேலம் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்தத் தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

தாயுமானவர் திட்டத்தில் சேலம் மாவட்டம் முதலிடம்!

image

சேலம் மாவட்டத்தில் 1,265 முழு நேரம், 478 பகுதி நேரம் என 1,743 ரேஷன் கடைகள் உள்ளன. தாயுமானவர் திட்டம் மூலம் 92,998 ரேஷன்கார்டுகளுக்கு விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக எண்ணிக்கையில் பயன்பெறுவோரில், சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

கிராம சபைக் கூட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஆக.15- ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி, மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

News August 13, 2025

சேலம்: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி!

image

சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர்களுக்கான 2025 முதல்வர் கோப்பை மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் இந்த போட்டியில் பங்கு பெற 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தில் விண்ணப்பிக்க https://cmtrophy.sdat.in (அல்லது) https://sdat.tn.gov.in பதிவு செய்து கொள்ள சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

சுதந்திர தின விடுமுறை – 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

சுதந்திர விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாளை (ஆக.14) முதல் ஆக.18- ஆம் தேதி வரை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இருந்து மதுரை, கோவை, ஓசூர், பெங்களூரு, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

error: Content is protected !!