India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஆவின் பால் நிறுவனத்திலிருந்து இந்திய ராணுவப் படைக்கு சுமார் 4,000 லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ஆர்டர் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து பால் கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை அடையாற்றில் உள்ள இந்திய கடற்படை தளத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என ஆவின் பால் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வார இறுதி நாட்களையொட்டி, சேலம் கோட்டம் சார்பில் நவ.15 முதல் நவ.17 வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இச்சிறப்பு பேருந்துகள், சேலம் மத்திய பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு நவ.15ல் தி.மலைக்கு சேலம், தர்மபுரியில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை (14.11.24) காலை 11 மணி அளவில் மத்திய மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடக்கிறது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் கே. சுபாஸ் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட, மாநகர நிர்வாகிகள், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
சேலம் புத்தகத் திருவிழா-2024′, சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில், வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 09ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான புத்தகக் கடைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி புத்தக பதிப்பகங்கள் புத்தக திருவிழாவில் பங்கேற்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் சிறுவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்வது தொடர்கதையாக உள்ளது. சிறுவர்களிடம் வாகனத்தைக் கொடுத்து ஓட்டினால் அவ்வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். அத்துடன், அவ்வாகனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடப்பு 2024 -25 ஆம் ஆண்டில் 7,000 நபர்களுக்கு ரூ.99 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்விக்கடன் வழங்குவது குறித்து அனைத்து வங்கிகளின் கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 152 விற்பனையாளர்கள், 10 கட்டுநர்கள் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் கடந்த நவ.7ம் தேதி வரை 15,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். சரிபார்ப்பு பணி முடிந்ததும், நேர்முகத் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காக எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி மற்றும் கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் (07371/ 07372) வரும் நவ.19-ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில், பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சேலத்தில் இன்று (12.11.24) பல்வேறு பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மல்லியக்கரை, கரூப்பூர், மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, நங்கவள்ளி, கூடமலை ஆகிய துணை மின்நிலையங்களின் கீழ் உள்ள ஊர்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மக்களே உங்க துணை மின்நிலையம் எதுனு கொஞ்சம் பாத்துக்கோங்க. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.