Salem

News March 1, 2025

மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க முடிவு!

image

பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 16.25 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும், எட்டு கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்கும் என சேலம் கோட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்.

News March 1, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீட்டிலிருந்தே கைப்பேசி வாயிலாக தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை பெற்று பயனடையலாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கைப்பேசி வாயிலாகவே தேவைப்படும் நேரத்தில் வரவழைத்துக் கொள்ளலாம். அதற்குண்டான கட்டணத்தை கைப்பேசி வாயிலாகவும் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள் 

image

சேலத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8:30 தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொன்னம்மாபேட்டை பகுதியில் அன்னதானம் நடைபெறவுள்ளது. 2) காலை 9:30 மணி 2025-26 கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மணக்காடு அரசு துவக்கப்பள்ளி துவக்கி வைக்கும் நிகழ்வு. 3) காலை 9 மணி காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் விவேகானந்தா மருத்துவமனையில் நடைபெறுகிறது. 

News March 1, 2025

பறவைகள் கணக்கெடுப்பில் மாணவர்கள் பங்கேற்கலாம்

image

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் வருகின்ற மார்ச் 08, 09 ஆகிய தினங்களிலும் சதுப்பு நில பறவைகள் கணக்கெடுப்பும் மற்றும் மார்ச் 15, 16 ஆகிய தினங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

News March 1, 2025

காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்துலுக்கான சிறப்பு முகாம்!

image

காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 01 முதல் மே 31 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது.பாலிசிகளை புதுப்பிக்கும் போது செலுத்த வேண்டிய தாமதக் கட்டணத்தில் 25% முதல் 30% தள்ளுபடியை அஞ்சல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வேண்டுகோள்!

News March 1, 2025

சேலம் மாவட்டத்தில் மழை

image

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதல் சில பகுதியில் லேசான சாரல் மற்றும் மிதமான மழை பெய்யது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், காலையில் பெய்த சாரல் மழையால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

News March 1, 2025

‘SAY NO TO DRUGS’ சேலம் போலீசார் பதிவு 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பிப்ரவரி 28 ‘SAY NO TO DRUGS’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News February 28, 2025

குழந்தை பாலினம் விவகாரம்- 9 பேர் சஸ்பெண்ட்

image

சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில் குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15,000 வசூல்.புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்து வந்த அரசு மருத்துவர் முத்தமிழ்,செவிலியர்கள் 6 பேர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்.ஸ்கேன் சென்டருக்கு சீல்- ஸ்கேன் சென்டரில் இருந்த இயந்திரங்களும் பறிமுதல்.

News February 28, 2025

சேலத்தில் 100 வயதை கடந்த பாட்டிக்கு சதாபிஷேக விழா

image

சேலம் குகையில் அருணாச்சல ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி அவர்களும் பேரன், பேத்திகளுடன் சேலம் குகையில் வசித்து வருகின்றனர். ஐந்து தலைமுறையை பார்த்த மூதாட்டி சரஸ்வதிக்கு இன்றுடன் 100 வயது பூர்த்தியாகிவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்து, இன்று சதாபிஷேக விழாவை உற்சாகமுடன் கொண்டாடினர்.

News February 28, 2025

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்”

image

“தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்; கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் இருவர் பங்கேற்பார்கள்; தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம்; தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. தான்” என சேலத்தில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி.

error: Content is protected !!