India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு (ஆக.20) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
https://cmtrophy.sat.in, https://sdat.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.
சேலம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக சேலத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 6,592 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 3,816 பேர் மட்டுமே எழுதினர். 2,776 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம் மக்களே.. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி வெளியிட்டார். கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளில் விநாயகர் சிலை கரைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை அனுமதிக்கப்பட்ட நீர் நிலையங்களில் மட்டும் தான் கரைக்க வேண்டும் ரசாயனம் இல்லாத களிமண் சிலையை மட்டும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு.
சேலம் ஆகஸ்ட்19 நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ நடைபெறும் முகாம் இடங்கள்:
▶️நவபட்டி மாதவி மஹால் நவபட்டி.
▶️ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை ஆத்தூர்.
▶️கருப்பூர் சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை. ▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா மஹால் மேற்கு ராஜபாளையம்.
▶️வீரபாண்டி விக்னேஷ்வரா திருமண மண்டபம் அரியானூர்.
▶️ எடப்பாடி ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில் அருகில் சமுதாயக்கூடம் பக்க நாடு கஸ்பா.
சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா். மேலும், விவரங்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்புகொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
சேலம் மக்களே நாளை மின் பராமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. அதன்படி அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, மணக்காடு, ஏற்காடு, முத்துநாயக்கன்பட்டி, கே.ஆர்.தோப்பூர், இரும்பாலை, மாரமங்கலத்துப்பட்டி, பாகல்பட்டி, பேளூர், புழுதிக்குட்டை, வெள்ளாளப்பட்டி, குறிச்சி, பெரியகுட்டி மடுவு, சின்னமநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE பண்ணுங்க மக்களே!
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., “தி.மு.க. கூட்டணி கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி கோரிக்கை விடுக்கவில்லை. ஆட்சியில் பங்கு பற்றியும் தலைவர்கள் பேசவில்லை. சில இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆசையை வெளியிடுகிறார்கள். ஆனால், அது கூட்டணி தலைவர்கள் கருத்தாகவே இல்லையென” தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.