India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாகன விபத்தைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம், தர்மபுரியில் கடந்த 9 மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 393 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுப்போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம் வழியாக ராமநாதபுரத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என சேலம் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதன்படி ஹூப்ளி- ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (07355) வருகிற 4-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைதோறும் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு ஓசூர் வழியாக இரவு 7.50 மணிக்கு சேலம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு <

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம் மாவட்ட இசைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை விஜயதசமி (அக்-2) அன்று நடைபெறும் என்றும், 13 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் ரூ. 350 சேர்க்கை கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு 0427-2906197, மற்றும் 9443539772, 9994738883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையங்கள் அமைத்த 30 சதவீத மானியமாக ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளிகள் வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். மானிய உதவி பெற www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register விண்ணப்பிக்கலாம்.

சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று கண்டெய்னர் லாரி ஒன்று, குளிர்பானம் எடுத்து சென்ற மினி லாரி மீது மோதிய விபத்துக்குள்ளானது; இதில் லாரிக்கு நடுவில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மற்றொருவர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.org இணையதளத்தில் விண்ணப்பித்து 30.11.2026 க்குள் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அதன் நகலினை நேரில் அளிக்க வேண்டும் என சேலம் ஆட்சியர் தகவல்!

சேலம் மாவட்டத்தில், வாரத்தில் 4 நாட்களுக்கு நடைபெற்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம், தற்போது தொடர் விடுமுறைகள் காரணமாக 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி ஆகிய தொடர் விடுமுறைகள் காரணமாக இந்த முகாமிற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, இந்த முகாம் அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.30) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.