India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

19 கிலோ எடைக்கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 15 முதல் ரூபாய் 16.50 வரை அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சேலத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,687- லிருந்து ரூபாய் 16.50 உயர்ந்து ரூபாய் 1,703.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூபாய் 886.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது விடுமுறை என்று மறந்துவிடாதீர்கள் 1)கொண்டலாம்பட்டி மண்டலம் நேரு கலையரங்கம் 2)தாசநாயக்கன்பட்டி ஸ்ரீ விஜய மஹால் கஜல்நாயக்கன்பட்டி 3)வீரக்கல் புதூர் சமுதாயக்கூடம் ராம்நகர்4) அயோத்தியபட்டினம் பெரியசாமி உடையார் திருமண மண்டபம் வலசையூர் 5)பெத்தநாயக்கன்பாளையம் சமுதாயக்கூடம் பாப்பநாயக்கன்பட்டி 6)காடையாம்பட்டி காமாட்சி அம்மன் மண்டபம்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு <

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி வசிஷ்ட நதி தரைப்பாலத்தின் அடிப்பகுதியில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் சடலம் மிதப்பதாக, ஆத்தூர் நகரக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், ஆற்றில் மிதந்த அந்தச் சடலத்தை மீட்டனர். பின்னர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண் ஒருவர், சேலம் ஆத்தூர் அருகே காமராஜர் நகர் பகுதியில், தனது காதலன் தினகரனுடன் சேர்த்து வைக்கக் கோரி, காதலனின் வீட்டின் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் ஊரகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி, மிஷன் ரேபீஸ், சேலம் விலங்குகள் நல ஃபவுண்டேஷன், தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறை ஆகியவை இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் சேலம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் 14 இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம்களை நடத்தினர். இம்முகாம்கள் மூலம் சுமார் 2,009 நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்.05, 06 ஆகிய தேதிகளில் சேலம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று அக்டோபர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தினை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.02) உங்கள் தலைக்கவசம் ஆபத்தில் உள்ளது, ஆனால் நீங்கள் ஆபத்தில் இல்லை. பாதுகாப்பாக ஓட்டுங்கள் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.