Salem

News April 5, 2024

சேலம்: வெயிலின் தாக்கம் 106.2 டிகிரியாக அதிகரிப்பு

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (ஏப்ரல்-05) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 5, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு

image

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சேலம் சங்கர் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மேற்கொண்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், சேலம் வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News April 5, 2024

சேலம்: 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதிநாள், அமாவாசை மற்றும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளதாக சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

சேலம்: ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை!

image

சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(ஏப்.4) மாலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை என கூறினார்.

News April 4, 2024

சேலம் அருகே பட்டப்பகலில் வெறிச்செயல்

image

ஆத்தூர் அருகேயுள்ள தண்டவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இந்நிலையில் கருப்பண்ணனின் மனைவி மாரியம்மாளும் மகன் ராஜாவும் சேர்ந்து சொத்தை எழுதி வைக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணனை அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

News April 4, 2024

ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

image

2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 03) இரவு வரை நடைபெற்ற நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் சோதனை மூலம் ரூபாய் 1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்தார்.

News April 4, 2024

சேலம்: விடிய விடிய கலெக்டர் ஆய்வு

image

2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று(ஏப்.3) இரவு முழுவதும் விடிய விடிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். இதில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 4, 2024

சேலம்: ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் நேற்று(ஏப்.3) வரை நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படையினர் மூலம் ரூ.1.88 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி உத்தரவு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!