Salem

News April 20, 2024

எடப்பாடி: இலவச சேவைக்கு குவியும் பாராட்டு

image

எடப்பாடி அருகே சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(25). 3 ஆம்புலன்ஸ் வைத்துள்ள இவர், நேற்று மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நடந்து செல்ல முடியாத முதியோர், ஊனமுற்றவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்து, 30க்கும் மேற்பட்டோரை இலவசமாக ஆம்புலன்சில், அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்து மீண்டும் வீட்டில் வந்து இறக்கிவிட்டுள்ளார். இச்சேவைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News April 20, 2024

சேலம்: இறைச்சி கடைகள் செயல்படாது!

image

சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சேலம் மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுப்படி இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் செயல்படக்கூடாது. மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

சேலம்: தேர்தலை புறக்கணித்த மக்கள்!

image

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி இ.காட்டூரில் 257 பேர் மட்டுமே வாக்களித்து இருந்தனர். இதனை தொடர்ந்து 42 பேர் 49ஓ படிவத்தை பூர்த்தி செய்து அதில் எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டு போட விருப்பமில்லை என பதிவிட்டிருந்தனர். 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று குறிப்பிடத்தக்கது.

News April 19, 2024

எடப்பாடியில் 84.71% வாக்குகள் பதிவு

image

சேலம் மக்களவை தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 321 வாக்கு சாவடிகளில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி 84.71 % வாக்காளர்கள் வாக்கு பதிவாகியுள்ளது என்று எடப்பாடி வட்டாட்சியர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

News April 19, 2024

சேலம்: 106.2 பாரன்ஹீட் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல்-19) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News April 19, 2024

சேலம் வாக்குப்பதிவு நிலவரம்

image

சேலம் மக்களவைத் தொகுதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி
ஓமலூர் 61.1%, சேலம் வடக்கு 54.8%, வீரபாண்டி 64.62%, சேலம் தெற்கு 56.6%, எடப்பாடி 65.57%, சேலம் மேற்கு 54.52% மொத்த 60.05% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் வாக்களிக்க இன்னும் இரண்டு மணி நேரமே உள்ள நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

திமுக வேட்பாளர் மலையரசன் வாக்களிப்பு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று தியாகதுருகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். மேலும் திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் கூறினார். பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு செலுத்த ஆர்வமாக வருகிறார் என்றும், திமுக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

News April 19, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 கன அடியாக குறைவு

image

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 55.620 அடியில் இருந்து 55.410 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 21.389 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 10 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கு அணை மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக உள்ளது.

News April 19, 2024

கெங்கவல்லி: ஓட்டுபோட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி 250வது பூத்தில், இன்று அதே பகுதியை சேர்ந்த சின்ன பொண்ணு என்ற 77 மூதாட்டி வாக்கு செலுத்த வந்துள்ளார். அப்போது, உள்ளே நுழைந்து வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 19, 2024

சேலம் மாநகராட்சி மேயர் வாக்களிப்பு

image

சேலம் மாநகராட்சி 6வது கோட்டம் சின்ன கொல்லப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை சேலம் மாநகராட்சி மேயரும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளருமான ஆ.இராமச்சந்திரன் வாக்குப்பதிவு செய்தார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

error: Content is protected !!