India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-27) மாவட்டத்தில் அதிகபட்சமாக 107.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளை பெற்றோர்கள் கவனமுடன் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்றும். வெயில் நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி, பொட்டனேரி அடுத்த ஆரியன்காட்டுவளவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி குஞ்சுபையன்(55). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று(ஏப்.26) காலை 10:00 மணிக்கு குஞ்சு பையன், பொட்டனேரியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றபோது சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேட்டூர் தீயணைப்பு குழுவினர், அவரது சடலத்தை மீட்டனர். சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலத்தில் நேற்று (ஏப்.26) 106.7 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று சேலம் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாழப்பாடி அருகே தும்பல்வனச்சரகம் , பெலாப்பாடி காப்புக்காடு ஒட்டியுள்ள ஓடைப் பகுதியில் நாய்களால் புள்ளிமான் ஒன்று துரத்தி வரப்பட்டுள்ளது. இதனை அறுத்து கறியை பங்கிட்டுக்கொள்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று மான் கறி வைத்திருந்த பெரியசாமி, மாயவன் உட்பட 8 பேரை பிடித்து ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேசமயம் மே 5ம் தேதி முதல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதன்படி, ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற உள்மாவட்டங்களில் மே முதல் வார இறுதியில் இருந்து இரண்டாவது வாரம் வரை மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மத்திய சிறைச்சாலையில், ரமேஷ் என்ற கைதி இன்று(ஏப்.26) சிம் கார்டை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம் கார்டை மீட்ட சிறை துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உறவினர்களை சந்திக்க கைதி ரமேஷுக்கு 3 மாதம் தடைவிதித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில், அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், இன்று(ஏப்.26) சூரமங்கலம் பகுதியில் நீர், மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் நேற்று (ஏப்.25) 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மே 1ஆம் தேதி முதல் சேலத்தில் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

சேலம் அருகே சொத்து பிரச்னையில் தந்தையை, மகனே அடித்து கொன்ற சிசிடிவி காட்சி நேற்று(ஏப்.25) வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் போலீசார் நேற்று சக்திவேல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். சொத்து பிரச்னையில் குழந்தைவேலுவை, அவரது மகன் சக்திவேல் அடித்துக் கொலை செய்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.