India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோடை விடுமுறையையொட்டி, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி முக்கிய நகரங்களில் முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ரயில்வே போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை என சேலம் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து நேற்று நடந்த சிறப்பு வரிவசூல் முகாமில் ஒரே நாளில் ரூ.86.21 லட்சம் வசூலிக்கப்பட்டதாக சேலம் மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது. மேலும் சொத்து வரி செலுத்தாத நபர்கள் உடனே செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சேலத்தில் நேற்று (ஏப்.28) 104.18 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதிச் செய்யும் வகையில் நடைபெற்ற அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

சேலம் மாவட்ட நீதித்துறையில் 120 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சேலம் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தீ தடுப்பு குறித்து வனத்துறையினர் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வனத்துக்குள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 3 மாதம் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன்
வைக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்
உள்ளிட்ட இம்மையத்தின் அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனை சேலம் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 4 மாதத்தில் 126 பேர் ரயில் சிக்கி பலியாகி உள்ளனர். சேலத்தில் 40 பேர், ஜோலார்பேட்டையில் 46 பேர், காட்பாடியில் 30 பேர், ஓசூரில் மற்றும் தர்மபுரியில் தலா 5 என மொத்தம் 126 பேர் ரயிலில் சிக்கி இறந்துள்ளனர் என்று சேலம் தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் உட்பட 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை வரும் வாரம் மேலும் தீவிரமாகும் என்பதால், முதியவர்கள், கர்ப்பிணிகள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.