Salem

News April 30, 2024

சேலம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

image

சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 30, 2024

காயம் அடைந்தவர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

image

சேலம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்எல்ஏ ராஜேந்திரன், டீன் டாக்டர் மணியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

News April 30, 2024

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

சேலம்: அரசு ஐடிஐயில் 3 மாத பயிற்சி வகுப்பு!

image

சேலம், கோரிமேடு அரசு ஐடிஐயில் வாட்ச் அண்ட் கிளாக் ரிப்பேர் என்ற 3 மாத சிறு குறுகிய கால பயிற்சிக்கு இலவச சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே 22ம் தேதிக்குள் உரிய சான்றிதழ்களுடன் சேலம் அரசு ஐ.டி.ஐ.யை அணுகி பயன் பெறலாம் என சேலம் அரசு ஐடிஐ துணை இயக்குனரகம் முதல்வர் (பொ) ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

அவரக்கொட்டை களி கிண்டி வழிபாடு

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த கஞ்சமலை சித்தர் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்து, சித்தர் சிறப்பை கொண்டாடும் வகையில் சேலம் சுற்றுப்புற பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த தேங்காய், ராகி, அவரை, வெல்லம் உள்ளிட்டவை கொண்டு அவரக்கொட்டை களி கிண்டி, சாமிக்கு படையில் இட்டு வழிபட்டனர். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

News April 30, 2024

சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரிப்பு

image

கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக சேலத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. மண் பானை தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. பானை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விற்கப்படுகிறது. பைப் பொருத்தப்பட்ட மண்பானை ரூ.300 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

News April 30, 2024

சேலம் மாவட்டத்தின் நேற்றைய வெப்பநிலை

image

சேலத்தில் நேற்று (ஏப்.29) 106.88 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் சேலம் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 39° – 43° செல்சியஸ் பதிவாகக்கூடும்.

News April 30, 2024

வாக்கு எண்ணும் மையம் பகுதியில் டிரோன்களுக்கு தடை

image

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News April 30, 2024

சேலம்: குண்டு மல்லி விலை சரிவு

image

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சேலம் கடைவீதியில் உள்ள பூ மாரக்கெட்டுக்கு பூக்களை கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை சரிந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் கிலோ ரூ.360க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.80 குறைந்து ரூ.280க்கு விற்பனை செய்யப்பட்டது.

News April 29, 2024

சேலத்தில் கடும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்-29) மாவட்டத்தில் அதிகபட்சமாக 106.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

error: Content is protected !!