Salem

News May 10, 2024

சேலம் அருகே வீட்டிற்குள் புகுந்த டேங்கர் லாரி

image

சேலம் மாவட்டம் மணி விழுந்தான் காலனி பகுதியை சேர்ந்த அழகுத்துரை என்பவர், நேற்று(மே 9) அதிகாலை 3 மணியளவில் ஆத்தூர் நோக்கி டேங்கர் லாரி ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரம் ஆட் கொல்லி பாலம் அருகே வரும்போது செந்தில்குமார் என்பவர் வீட்டின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது இதில் வீட்டில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 9, 2024

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இ-பாஸ் அமல்படுத்தப்படாததால் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சாலையோர கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பாதையில் கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

News May 9, 2024

லாரி மீது கார் மோதி விபத்து – மாணவர் பலி

image

சேலம், சங்ககிரி, ஆவரங்கம்பாளையம் அருகே கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காரின் பின்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் கீர்த்தி குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 9, 2024

பூட்டிய வீட்டுக்குள் கணவன் மனைவி சடலம்

image

சேலம், இரும்பாலை அருகே ஓம்சக்தி நகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் நாச்சிமுத்து, மனைவி ஜெகதாம்பாள் ஆகியோரது உடல் அழுகிய நிலையில் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டுக்குள் கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News May 9, 2024

பெரியார் பல்கலை. மாணவர்கள் இங்கிலாந்து பயணம்

image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் வேலை வாய்ப்பு சார்ந்த பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்கௌட் (SCOUT) திட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கிலாந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் 2 மாணவர்கள் பெரியார் பல்கலை. இணைவு பெற்ற கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News May 9, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

சேலம்: ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!

image

சேலம் அருகே மல்லிக்குட்டை பாரதிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தோஷ்(12), அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் சுதர்சன்(11). அரசு பள்ளியில் படித்து வந்த இவர்கள், பள்ளி விடுமுறை காரணமாக நேற்று(மே 8) மல்லி குட்டை ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டனர்.

News May 9, 2024

489 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 489 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பான தகவல்களை
1098 அல்லது 151 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌.பிருந்தாதேவி தெரிவித்தார்.

News May 9, 2024

சேலத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

image

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

2 லட்சம் கோழிகள் உயிரிழப்பு

image

சேலம் மாவட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் இயங்கி வருகிறது. இதனை அடுத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருத்துவ சோதனை செய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால், சேலம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் கோழிகள் இறந்து உள்ளது என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் முட்டை உற்பத்தி 20% குறைந்துள்ளது என தெரிய வருகிறது.

error: Content is protected !!