India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.16) மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

சென்னையை சேர்ந்த ராஜேஷ் குமார், தினேஷ் ஆகியோர் கெங்கவல்லி, சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தரனீஸ் என்பவருடன் கெங்கவல்லிக்கு பைக்கில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது கெங்கவல்லி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் ராஜேஷ் குமார் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்து அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 96.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. இதையடுத்து ஜல் ஜீவன் சர்வேக்ஷான் 2023 பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவியிடம் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் வழங்கினார்.

சேலம் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் வரும், 18 – 26 வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதரவற்ற விதவை சான்றிதழ் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்றிதழ் பெற மனுக்கள் தரலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நீதிமன்றத்தின் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞராக வக்கீல் எஸ். அருள் என்பவரை சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிருந்தா தேவி நியமனம் செய்துள்ளார். இவருக்கு சக வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சேலம் பெரியார் பல்கலைக் கழக கூடுதல் பொறுப்பிற்காக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் கதிரவன் ஆகியோருக்கு 50 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த தொகை மீது உரிய விசாரணை நடத்தி அதை மீண்டும் பல்கலைக்கழக நிதியில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலத்தில் ஐஸ்வர்யம் விருதுகள் 2024 என்ற அமைப்பு பல்வேறு துறைகளில் திறன் வாய்ந்தவர்களை கெளரவிக்கும் வகையில் விருது வழங்கி கெளரவிக்க உள்ளது. அதன்படி, ஆசிரியர், விளையாட்டு, இலக்கியம் சமூக பணி,சுற்றுச்சூழல், அரசியல், மருத்துவம் என எந்த துறையாக இருந்தாலும் அதில் சாதனை படைத்தவர்களை ஐஸ்வர்யம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது. விபரங்களுக்கு 9843828448 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், செவிலியர் போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஜூன் 15) காலை 43.10 அடியிலிருந்து 42.87 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2-வது நாளாக வினாடிக்கு 149 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 13.61 டிஎம்சியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.