India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில், தற்போது மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகப்பிள்ளை, பாலு, வீரமுத்து, ராஜேந்திரன் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளனர். இதனால், சேலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 15 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 47ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 0427 2452202, 0427 1077, என்ற தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி குமார் தலைமையிலான போலீசார் தற்போது சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்றிரவு உயிரிழந்தநிலையில், இன்று (ஜூன் 20) காலை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாவு என்ற செங்கோடன் (வயது 60) கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உடல் அவரது சொந்த ஊரான இளம்பிள்ளையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நாளை (ஜூன் 21) நடைபெறுகிறது. முகாமில் திருநங்கைகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை, சுயதொழில் மானியம், திறன் பயிற்சி உள்ளிட்ட சேவைகளை நேரடியாக பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி ஆகிய 3 பேர் நேற்று நேற்றிரவும், ஆனந்தன், ரவி, மனோஜ்குமார், ஆனந்த், விஜயன் ஆகிய 5 பேர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், நாகபிள்ளை என்பவரும் தற்போது உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் இயல்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த பிப்ரவரி மாத கூட்டத்துக்கு பிறகு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், மார்ச், ஏப்ரல், மே மாத கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலக கூடத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளதாக கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரி எண்ணிக்கை 31 ஆக உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி சேலம், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்த 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.