Salem

News June 30, 2024

துணைவேந்தர் பணி நீட்டிப்பு: கருத்து கேட்பு கூட்டம்

image

சேலம் பெரியார் பல்கலை கழக துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக தொழிலாளர் சங்கம், ஆசிரியர் சங்க கருத்துக் கேட்பு கூட்டம் பல்கலைக் கழக நுழைவாயிலில் இன்று நடைபெற்றது. முதற்கட்டமாக நாளை மாலை பல்கலைக் கழக நுழைவு வாயில் முன்பு துணை வேந்தரின் பணி நீட்டிப்புக்கு எதிராக வாயில் முழக்க கோஷம் நடைபெறும் என்றும். அடுத்த கட்ட நடவடிக்கை தொழிலாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

News June 30, 2024

பதவி தர மறுப்பது சமூக அநீதி: ராமதாஸ் கண்டனம்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை தலைவர் பதவிக்கு பேராசிரியை தனலட்சுமியை புறக்கணித்து, வெங்கடேஸ்வரனை நியமித்தது சமூக அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து தகுதிகளும் இருந்தும் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதற்காக பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மூத்த பேராசிரியை தனலட்சுமிக்குதான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News June 29, 2024

ஜவுளி பூங்கா அமைக்க மானியம் – ஆட்சியர் தகவல்

image

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அரசு மானியத்தில் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மண்டல துணை இயக்குநர் துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின்ரோடு, சேலம் 636006 என்ற முகவரியிலோ, 0427-2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, ddtextilessalemregional@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

சேலம் மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்த ஏழு பேர் பதவி உயர்வு பெற்று இன்று (ஜூன் 29) முதல் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டனர். காத்தமுத்து, ராஜமாணிக்கம், பார்த்தசாரதி, காந்தி தேசாய், மனோகரன், நாகலட்சுமி, ராமகிருஷ்ணன் இவர்கள் ஏழு பேரும் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

News June 29, 2024

சேலம் மாவட்டத்தில் 35 தாசில்தார்கள் இடமாற்றம்

image

சேலம் மாவட்டத்தில் தற்போது பணியாற்றி வந்த 35 தாசில்தார்கள் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவின் அடிப்படையில் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பணி மாறுதல் செய்யப்படும் இடம் மேட்டூர் தாசில்தார் ரமேஷ், காடையாம்பட்டி விமல் பிரகாசம், சங்ககிரி வாசுகி, பெத்தநாயக்கன் பாளையம் ஜெயக்குமார், தலைவாசல் பாலாஜி, கெங்கவல்லி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 35 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 29, 2024

ஆளுநரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிலாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், திங்கள்கிழமை முதல் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு உரிய தண்டனை பெற்று தர வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

News June 29, 2024

சேலம் பல்.கழகத்திற்கு ராமதாஸ் கண்டனம்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத்தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அவருடைய பதவிகாலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2025 மே.19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

News June 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூன்.28) நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இணை இயக்குநர் ச.சிங்காரம்,கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.இரவிக்குமார், மாவட்ட நேர்முக உதவியாளர் ந.நீலாம்பாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News June 28, 2024

பத்ம விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்முக திறமை உள்ளவர்களுக்கு குடியரசு தினத்தன்று பத்ம விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுக்கு தகுதியுடைய நபர்கள்  https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

error: Content is protected !!