Salem

News July 2, 2024

ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை குறித்தும், அத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

News July 2, 2024

அதிமுக நிர்வாகிகள் விரைவில் மாற்றம்

image

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், நேற்று ஆத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறும் தொகுதி, அது எப்படி தோற்றுப் போனது என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News July 2, 2024

எழுத படிக்கத் தெரியாதவர்கள் கணக்கெடுப்பு

image

சேலம் மாவட்டத்தில் இதுவரை 49,127 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓமலூர் ஒன்றியத்தில் 4,286 பேர் உள்ளனர். மாவட்டத்தில் யாருடைய பெயரும் விடுபடாமல் கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து நடத்தி, 100% எழுத்தறிவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News July 2, 2024

GST வசூலில் சேலம் முதலிடம்

image

2023-24ஆம் நிதியாண்டிற்கான GST வசூலில் சேலம் GST கோட்டம் சாதனை படைத்துள்ளதாக சேலம் GST ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்று ஜிஎஸ்டி பவனில் நடந்த ஜிஎஸ்டி விழாவில் பேசிய அவர், GST வசூலில் தமிழக மாநகராட்சி அளவில் சேலம் முதலிடம். சேலத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.1,358.31 கோடியும், 2023- 24 நிதியாண்டில் ரூ.3,970.71 கோடியும் வசூலானது எனத் தெரிவித்தார்.

News July 2, 2024

துணைவேந்தர் பதவி நீட்டிப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவி நீட்டிப்புக்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களை சந்தித்த அவர், ஊழல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவருக்கு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என்றும், போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

News July 1, 2024

மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் (ஜூலை 05)-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.

News July 1, 2024

நான்கு ஆண்டுகளாக சேலம் முதலிடம்

image

சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று (ஜூலை.1) நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News July 1, 2024

சேலம் கலெக்டர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். அதன்படி, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஜூலை.09 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி காலை 9 மணிக்கு சேலம், கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

News July 1, 2024

துணைவேந்தராக ஜெகந்நாதன் மீண்டும் பதவியேற்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஜெகந்நாதன் இன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணைவேந்தர் பணியைத் தொடரும் கோப்பில் கையொப்பமிட்டு ஜெகந்நாதன் பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் (ஜூன் 30) அவரது பதவி முடிவடைந்த நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜெகந்நாதனுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்புச் செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண் துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

error: Content is protected !!