India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம், இளம்பிள்ளை அருகே நெடுஞ்சாலையில் கார் ஒன்று நின்றுள்ளது. இதையடுத்து இன்று அப்பகுதியினர் சந்தேகத்தின் பேரில் காரில் பார்த்தபோது, சடலம் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலின் பேரில், போலீசார் பகுதிக்கு விரைந்து சென்று, காரில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கிட்டப்பதை உறுதி செய்தனர். மாவட்ட எஸ்பி அருண் கபிலன் நேரில் ஆய்வு செய்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நாளை (ஜூலை 13) தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,469 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத் தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) சேலம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் – 1 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாடு வனத்துறை மற்றும் சேலம் வாழப்பாடி சமூக காடுகள் சரகம் மூலம் வாழப்பாடி, அயோத்தியப்பட்டினம், சீல்நாயக்கன்பட்டி, பனமரத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு இலவசமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை தேக்கு, வேங்கை, புளி, வேம்பு, செம்மரம் போன்ற மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மேலும் தகவல்களுக்கு 94865- 97725, 86106-08452 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

சேலம் மாநகர காவல் ஆணையாளராக பிரவீன் குமார் அபினவு இன்று பொறுப்பேற்றார். அப்போது பேசிய அவர், “சேலம் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். குற்ற சம்பவங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும்” எனக் கூறினார்.

சாரதா கல்லூரி சாலையில் ‘ரத்னா ஸ்குயர்’ என்ற பெயரில் மால் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அண்மையில், கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று திறந்துவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று அமைச்சர் கே.என்.நேரு இந்த புதிய மாலை திறந்து வைத்தார். இந்த மாலில் 4 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா பார்க்க வருபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி பகுதியில் வசிப்பவர் கருணாகரன். இவர் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இவர் வீட்டில் இல்லாத நேரத்தில், நேற்று வீட்டில் வைத்திருந்த ரூ.90 லட்சம் பணம் திருடுபோய் உள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அருண் கபிலனிடம் புகார் அளித்தார். தனது பூர்வீக சொத்தை விற்று, வீட்டில் பணம் வைத்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்கள் மூலம் சேலத்தில் 54,000 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். இதுகுறித்து ஓமலூரியில் பேசிய அவர், இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை அவா்கள் இருக்கும் பகுதிக்கே சென்று மனுக்களைப் பெற்று, உடனடியாக தீா்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 367 கிராம ஊராட்சி பகுதிகளில் 92 முகாம்கள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது” என்றாா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு மாட்டை சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்கோ, வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு செல்ல கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.