India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் – திருச்சி அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு திருச்சி அணி, 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 163 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிப் பட்டியலில் சேலம் அணி 7ஆவது இடத்தில் உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் தடை என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏற்காடு பகுதிக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாமின் மூன்றாம் நாளான ஜூலை 16- ம் தேதி அன்று வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, கொங்கணாபுரம், காடையாம்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மக்களுடன் முதல்வர் முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி, ஏர்வாடி
வாணியம்பாடி, வாழக்குட்டப்பட்டி
ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 2வது நாளாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி பொது மக்களிடம் நன்றி தெரிவித்தார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர், நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொது
மக்கள் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடன் மற்றும் வட்டித்தொகையை இணையதள பரிவர்த்தனை அல்லது வங்கி சேவைகள் வழியாக மட்டுமே திரும்ப செலுத்த வேண்டும். எனவே, 10ஆம் தேதி முதல் அனைத்து சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் ஜூபே , போன்பே, நெட்பேங்க் சேவைகள் வழியாக செலுத்தலாம் என்றார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை 19-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு பெரியார் கலையரங்கில் பொது கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், அங்கு அட்டவணையில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு பொது கலந்தாய்வு வழியாக நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, வாக்காளர்களை இன்று நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி நன்றித் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது, சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உடன் இருந்தார்.

சேலம் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உறுதி அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தி, ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, குற்றச் செயல்கள் நடைபெறாத மாநகரமாக மாற்றி பொதுமக்கள் விரும்பும் முறையாக காவல்துறை செயல்படும் என உறுதியளித்தார்.

90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்குள் வருகை தருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 47 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு பணியில் 4 தனிப்படைகள், 12 கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது விசாரணை நடத்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அணையும் உத்தரவிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.5 கோடி நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் அளித்த புகாரில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு ஆகியோர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.