India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அரசு அனுமதி பெற்று வரும் ஏப்.5ல் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ( SHARE பண்ணுங்க)
சேலம் மாநகரில் இன்று (30.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்பநிலை சதத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 30) சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் முதியவர்கள் கடும் சிரம்மமடைந்துள்ளனர்.
சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியைப் பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்துத்தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கோடீஸ்வரனின் மகன் கவின் ஸ்ரீநாத் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது, கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தான். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வீராணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய அளவிலான 18வது சப்ஜூனியர் டென்னிஸ் போட்டி, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தனிநபர் போட்டி ஒற்றையர் பிரிவில், சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த வீராங்கனை தனிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தனிகாவிற்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயன்படும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழக அரசு மானிய விலையில் சோலார் பம்ப் இருட்டுகளை வழங்கி வருவதாகவும் மூணு எச்பி முதல் 15 எச்பி வரை வழங்கப்படும். இந்த பம்ப் செட்டுகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு- பெங்களூரு இடையே 2 மாதத்திற்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06555/06556) இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (மார்ச் 30) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. கோடைக்கால விடுமுறையைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு (மார்ச் 30) திருவண்ணாமலை மாவட்டம் போளூர்,செங்கம், கோத்தகிரி, நீலகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய 7 பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சங்ககிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (Share பண்ணுங்க.)
சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் கூறுகையில், வெயில் காலத்தில் இயற்கையாகவே உடல் சற்று சூடாக இருக்கும். இச்சமயத்தில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த நீரை குடிப்பதால் தலைவலி வயிற்று உபாதைகள் செரிமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் (ம) முதியோர்கள் கண்டிப்பாக பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. Share பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.