Salem

News July 26, 2024

சேலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் நீர் மட்டம் 100 அடி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அணையின் நீர் தேக்க பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி அணையின் நீர் தேக்க பகுதியான செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 26, 2024

அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நகர் மன்ற தலைவர்

image

சேலம், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி பேரூர் மன்ற தலைவர் லீலா ராணி, இன்று நகர்புறத்துறை அமைச்சர் கே.என்.நேருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு திட்டங்களை ஒதுக்கித் தர வேண்டும், நிதிகள் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அருகில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News July 26, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

சேலம் மேட்டூர் அணையில் இன்று (ஜூலை 26) காலை நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 32.693 கன அடியில் இருந்து 45.598 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 90.500 அடியில் இருந்து 92.620 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

News July 26, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (ஜூலை 26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது, காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரின் 2ஆம் தள கூட்ட அறை எண் 215இல் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் இரா. பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

News July 26, 2024

சேலத்தில் இதற்கெல்லாம் அனுமதி இல்லை

image

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கைகளில் கொடி, பேனர்கள், உருவப்படங்களை எடுத்துச் செல்ல கூடாது. சங்ககிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை போன்ற பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.டி.ஓ.லோகநாயகி தெரிவித்துள்ளார்.

News July 26, 2024

கோவை-சேலம் அணிகள் இன்று பலப்பரீட்சை

image

கோவை – சேலம் அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி, இன்று மதியம் 3.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சேலம் அணி, திருப்பூருக்கு எதிரான முந்தைய போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஆனால், இன்று தொடர் வெற்றிகளை குவித்து பலம் வாய்ந்த அணியாக உள்ள கோவையை எதிர்கொள்ள உள்ளதால், போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

News July 26, 2024

மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான பட்ஜெட் அறிக்கையாக தெரியவில்லை. பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக வழங்கி உள்ளார். இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், கோபால், தாசில்தார் வரதராஜன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News July 25, 2024

அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

image

சேலம் மாநகராட்சி ஆணையாளராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். பின் அவர் கூறுகையில், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார். மேலும் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும், பணி செய்யாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

News July 25, 2024

சேலம் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

image

சேலம் மாநகராட்சி மைய அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 26) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!