India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாழப்பாடி அடுத்த படையாச்சியூரை சேர்ந்தவர் முருகன் (58). இவரது மனைவி பொன்னம்மாள் (54). இவர்கள், சேசன்சாவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். சேசன்சாவடி பஸ் ஸ்டாப் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிவ் சென்னையிலிருந்து கோவை நோக்கி சென்ற விபத்து மீட்பு வாகனம் மொபட் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னம்மாள் பலியானார். முருகன் மருத்துவமனையில் இறந்தார்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பொ. சங்கர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் தொடர்புடைய அலுவலர் உள்ளனர்.

நாடாளுமன்ற மரபை மீறிய மத்திய அரசைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

➤சேலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ➤வாழப்பாடி அருகே நடந்த விபத்தில் முருகன் (கணவன்), பொன்னம்மாள் (மனைவி) 2 பேர் உயிரிழந்தனர். ➤திமுக மூத்த நிர்வாகி முல்லை பன்னீர்செல்வம் காலமானார். ➤மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். ➤சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில் அரசு தேர்வுக்காக பயிலும் மாணவ, மாணவிகளிடம் பயிற்சி குறித்த ஆலோசனைகளை இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். ஆய்வில் அஸ்தம்பட்டி மண்டல செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி ஆணையாளர் எஸ்.எஸ். சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சத்துணவு திட்டம் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு திருவிழா நடைபெற்றது. சிறுதானியங்களை கொண்டு 150-க்கும் மேற்பட்ட சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் பலருக்கு வந்து கொண்டு பார்வையிட்டு பயன்பெற்றனர்.

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் இன்று காலை 9 மணி அளவில், முல்லைவாடி பகுதியில் வசித்து வந்த, மறைந்த சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பன்னீர்செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர மன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் மதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கோபாலசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேட்டூர் அணையிலிருந்து 1.7 லட்சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மேட்டூர் அணைக்கு வருவதை பாதுகாப்பு நலன் கருதி தவிர்த்திட வேண்டும். ஆடிப்பெருக்கு விழாவின்போது பொதுமக்கள் காவிரி ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம். இவர் சேலம் இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் நேற்று உயிரிழந்தார். உடனடியாக அவருடைய குடும்பத்தினர் கண்தானத்தை ஆதவன் அரிமா சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். அரிமா சங்க நிர்வாகிகள் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.