Salem

News August 4, 2024

சேலத்தில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

image

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, பட்டகோவில், சின்னகடைவீதி, அக்ரஹாரம், சத்யம்கார்னர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், கமலா மருத்துவமனை, அண்ணா நகர், ஹவுசிங் போர்டு, திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News August 4, 2024

‘தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்’

image

பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சேலத்தை தலைநகராக கொண்டு தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் ரூ.15,000 கோடி அல்ல, ரூ.20,000 கோடி சிறப்பு நிதியாக நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் உருவாக்க தயாரா? சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள 200 ஏரிகளில் தற்போது வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரிகளில் அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாரிகள் சொல்லும் ஆழத்தில் தான் மண் எடுக்க வேண்டும் என்றும், அதிகமாக எடுத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 4, 2024

செயற்கைகால்கள் பெற்ற மாற்றுதிறனாளிகள்

image

கோவையில், செயற்கைகால்கள் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம் நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு சார்பில் கடந்த ஏப்ரலில் நடந்த முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு அளவீடுகள் எடுக்கப்பட்டன. தற்போது மருத்துகுழுக்களின் உதவியுடன் கோவை, ஈரோடு, சேலம், மதுரை என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்களை வெற்றிகரமாக பொருத்தினர்.

News August 4, 2024

சேலத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.

News August 4, 2024

5வது நாளாக 120 அடியாக உள்ளது

image

மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93,470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 16 மதகு வழியாக 48,500 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் காவேரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

News August 4, 2024

நட்புனா என்னானு தெரியுமா

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், சேலம் நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே,சேலத்தில் உள்ள 10,72,892 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

News August 3, 2024

சேலத்தில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சேலத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ➤மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். ➤தீரன் சின்னமலை நினைவு இல்லத்தில் இன்று அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். ➤மேட்டூர் அணையில் 70,000 கன அடியாக நீர் திறப்பு குறைவு. ➤சேலத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 9 இடங்களில் மக்கள் நீராட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

News August 3, 2024

மேட்டூர் செல்வோர் கவனத்திற்கு

image

சேலம், மேட்டூர் அணையின் பழைய காவிரி பாலத்தில் இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா மற்றும் முனியப்பன் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

error: Content is protected !!