India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தலைவாசல் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக ஆறகளூர், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, தலைவாசல், இலுப்பநத்தம், தென்குமரை தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், நாவலூர், தியாகனூர், காமக்காபாளையம், நத்தக்கரை, பெரியேரி, கோவிந்தம்பாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (ஆக.17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!

சேலம், ஓமலூர் வட்டம், சாமிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இன்று (15.08.2024) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் இரா.பிருந்தாதேவி, பார்வையாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, ஊராட்சி மன்ற தலைவர் எ.சின்னதுரை ஆகியோர் உள்ளனர்.

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி, தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவித்தார். உடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர
தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சேலம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. 3000 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களில் டெலிட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – சேலம் விமான கட்டணம் ரூ.2715 ஆக இருந்த நிலையில் இன்றும் நாளையும் ரூ.8,277 ஆக உயர்ந்துள்ளது. விமானம் கட்டணம் உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அருன் கபிலன் பணியாற்றி வந்து சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக கவுதம் கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

சேலம் மாவட்டத்தில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.