Salem

News August 23, 2024

கணினிமயமாக்கப்படும் கூட்டுறவு சங்கங்கள்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 150 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை ஆகியவை ஆதார் எண் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் பெறலாம் என சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

News August 23, 2024

சேலம் வழியாக மைசூருக்கு சிறப்பு ரயில்

image

மைசூரு- செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப். 04, 07 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து செங்கோட்டைக்கும், செப்.05, 08 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

சேலத்தில் மணமக்களை வாழ்த்திய இபிஎஸ்

image

அதிமுக பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ராஜா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 23, 2024

சேலம் கலெக்டர் ஆபிசில் முக்கிய கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகாா்கள் தொடா்பாக எரிவாயு வாடிக்கையாளா்கள், எரிவாயு முகவா்கள் ஆகியோர்களை கொண்டு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா்க்கும் கூட்டம் ஆக. 29ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 115 கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

News August 23, 2024

சேலம்: 2ம் கட்ட உடற்தகுதி தேர்வில் 327 பெண்கள்

image

சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 895 பெண்களுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 450 பேர் பங்கேற்றனர். அவர்களில் 327 பேர் தேர்ச்சி பெற்று 2ம் கட்ட உடற்தகுதிக்கு தேர்வாகினர். இவர்களுக்கு நேற்று 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது.

News August 23, 2024

சேலத்தில் காப்பீடு செய்ய அழைப்பு

image

சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடைக்கால பயிர்களுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வெண்டை,
வெங்காயம், தக்காளி பயிர்களுக்கு வரும் ஆக.31 ஆம் தேதி வரை காப்பீடு செய்ய
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வெண்டை ரூ.1,264, வெங்காயம் ரூ.2,050 மற்றும் தக்காளிக்கு ரூ.1,017 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

BREAKING சேலம்: பாலியல் வழக்கில் கைதானவர் மரணம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவராமன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

News August 23, 2024

சேலத்தில் தவெக கட்சியினர் கொண்டாட்டம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய தலைமை சார்பில் மக்களிடம் கட்சியின் கொடியை காண்பித்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வாழப்பாடி ஒன்றிய தலைவர்விஜய், மனோஜ், மாதேஷ், கௌதம், சதீஷ், தினேஷ், வேலவன், கணபதி, கார்த்திக், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News August 22, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம்  ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடப்பாடி, மேட்டூா், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் பணிபுரிய மூன்று சமுதாய அமைப்பாளா்கள் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

News August 22, 2024

சேலத்தில் கோவில் விழாவிற்கு இபிஎஸ் வருகை

image

சேலம், இளம்பிள்ளை அருகே மடத்தூர் பகுதியில் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற இருப்பதால் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விழாவில் இன்று கலந்து கொள்ள இருப்பதால், இளம்பிள்ளை பகுதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க காலை முதல் பரபரப்பாக கொடிக்கம்பங்கள் மட்டும் போஸ்டர்கள் வைத்தும் உற்சாக வரவேற்பு அளிக்க காத்துக் கொண்டுள்ளனர்.

error: Content is protected !!