Salem

News August 28, 2024

அமைச்சர் உதயநிதியை சந்தித்த Ex.எம்.பி

image

சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தற்போதைய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளருமான சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நேற்று சென்னையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று சால்வை அணிவித்து பூ கொத்துக் கொடுத்து சந்தித்தார்.

News August 28, 2024

கலக்க போகும் சேலம் வீரர், வீராங்கனைகள்

image

மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று (ஆக.28) பாரிஸில் தொடங்குகிறது.
வரும் செப்.8 வரை நடக்கும் போட்டியில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்கவுள்ள நிலையில், தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் துளசிமதி, நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

News August 28, 2024

சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 25 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 26 வரை கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

News August 28, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடப்பு மாதத்திற்கான கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

சேலத்தில் வெளுத்த மழை

image

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News August 28, 2024

சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மேலாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும் விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.

News August 27, 2024

சேலம் அருகே வெளுத்து வாங்கும் மழை

image

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

News August 27, 2024

சேலம் சரகத்தில் 276 பேரின் லைசென்ஸ் ரத்து

image

சேலம் மாவட்ட சரகத்துக்குட்பட்ட கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி, வாகனம் ஓட்டிய 276 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றும் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 235 பேரில் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 27, 2024

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் துவக்கி வைப்பு

image

சேலம் மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் சேவையினை கலெக்டர் இரா.பிருந்தாதேவி, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் தொடங்கி வைத்தார்கள். உடன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News August 27, 2024

இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம் 

image

சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் மின்சாரப் பராமரிப்புப் பணிகள் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெறவுள்ளது. இதனால் மாநகராட்சிப் பகுதியில் இன்று ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!