India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கெஜஜல்நாயக்கன் பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உறையாற்ற உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து சேலம் எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை (மார்ச் 19) பா.ஜ.க. சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சேலம் வந்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.2 டிகிரி செல்ஸியஸ்; 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சேலத்தில் நாள்தோறும் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நாளை மதியம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலம் வருகை தர இருப்பது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இன்று சேலம் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தூரத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுச் செய்தனர். அதேபோல், ஓமலூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் போட்டியிடுபவர்கள் அதிகம் பேர் வந்து செல்வர். இதனால் பாதுகாப்பு கருதி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் உள்பட கலெக்டர் அலுவலகம் முழுவதும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2.5 ஆண்டுகளில் பல்வேறு தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 97,761 பேருக்கு ரூ.68.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளர்கள், உடல் உழைப்பு மற்றும் இதர 16 வகை தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் பிரிவில் 83,553 பேருக்கு கல்விக்காக மட்டும் ரூ.18.68 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில், திமுக சார்பில் சேலம் நாடாளுமன்ற தேர்தலில் யார் களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சேலம் வர உள்ள நிலையில், விமான நிலையத்தில் வந்துச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், சேலம் விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.