India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓமலூரில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி, திமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். அவர் வரும் போது நம்மால் எதுவும் பேசமுடியவில்லை. எனவே, சேலத்திற்கு ஒரு அமைச்சர் கொடுத்தால் தங்களை குறைகளை தெரிவிக்க முடியும். இங்கு அமைச்சர் இல்லை என்றால் வெற்றி பெறமுடியாது என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகம் தெரிவித்தனர். இதன் மூலம் கிராமம், நகர்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளாம் காண முடியும் என்றனர்.

ஆத்தூர் இராணிப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்ல விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 7.9.2024 முதல் 9.9.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 25ம் ஆண்டு நிகழ்ச்சிக்கு கால்கோள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் ராணிப்பேட்டை நண்பர்கள் குழு அனைவரும் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகர் பகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்து அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை -பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செப்.2) முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படவுள்ளது. அதிகாலை 05.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 09.15 மணிக்கு சேலத்தை வந்தடையும். மறு மார்க்கத்தில், மாலை 04.50 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். சுமார் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஆயில் வீணாகியது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்து. பேசும்போது”எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன். எவ்வளவு தோண்டுபோனாலும் தன்னம்பிக்கை விட மாட்டேன் என்று மனம் திறந்து பேசினார்.

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி சாலையில் லாரி மீது மின் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், ஆட்டோவில் இருந்த திருச்சி மாயனூரைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஓட்டுநர் மூர்த்தி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.