India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் சரகத்தில், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 மாதத்தில் மட்டும் போதையில் வாகனம் ஓட்டிய 27 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 49 பேரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சேலம் மக்களவைத் தொகுதியில், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ந.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு, புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, சேலம் மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை, துப்பாக்கி உரிமதாரர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒருவார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பாமகவுக்கு சேலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே சேலத்தில் திமுக, அதிமுக மற்றும் பாமக என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் நாழிகல்பட்டி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையின் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.4.75 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சேலம் தெற்கு வட்டாட்சியர் மற்றும் தேர்தல் உதவி அலுவலருமான செல்வராஜிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு
மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு மார்ச் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று (மார்ச்.21) மாவட்டத்தில் அதிகபட்சமாக 99.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போட்டியிட்டு வென்ற கள்ளக்குறிச்சித் தொகுதியில், இந்த முறை திமுக-வின் தியாகதுருகம் பேரூர் கழகச் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கியவர். ஒன்றியத் துணைச் செயலாளராகவும், மாவட்ட பிரதிநிதி மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பணியாற்றியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன்களை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகைக் கடன் வழங்குவதற்கு உரிய ஆவணங்கள், பதிவேடுகள் முறையாக பேணப்பட்டு இருக்கிறதா? விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த குழுக்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சேலத்தில் நடைபெற்றது.சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மலையரசன் ஆகியோரை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார், கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.