India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். தி.மு.க வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எம்.பி.எஸ்.ஆர்.பார்த்திபன், காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை – குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று சிவஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைதிபெற வேண்டும், மழை பெய்ய வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அமைப்பின் நிர்வாகிகள் அரங்கநாதன், லட்சுமி, வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆனந்த், பல் மருத்துவர் அருள், ஓம்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரவடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரத்தில் ஏவிஎஸ் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தொழில்நுட்பத் திருவிழாவில் பங்கேற்ற இளைஞர்கள், பைக்கில் ஸ்டண்ட் அடித்து பல்வேறு சாகசங்களை செய்து காட்டி, பார்வையாளர்களை மிரள வைத்து அசத்தினர். இந்த இளைஞர்களுக்கு பள்ளி தலைவர் ராஜவிநாயகம் , முதல்வர் முனைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
சேலம் குரங்கு சாவடி மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் தனியர் நிறுவனங்களுடன் இணைந்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி ஓவியம் வரைந்தால் நெடுஞ்சாலை துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை வண்ணமிகு சேலமாக மாற்றும் வகையில் ஓவியர்கள் வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், கொலை செய்யப்பட்ட பெண் தேனியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. கத்தாரில் வேலை பார்த்தபோது நடராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கோவையில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசி சென்றனர். போலீசார் விசாரணையில் நடராஜன் மற்றும் நண்பர் கைது.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், சேலத்தில் 30ம் தேதியும், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுபவர்கள், பறக்கும் படையினர், மண்டல அளவிலான நுண் பார்வையாளர்கள் என தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 20,000 மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று முன்தினம் 100.4 டிகிரி வெப்பநிலை பதிவான நிலையில் நேற்று 101.7 டிகிரி ஆக உயர்ந்துள்ளது. உஷ்ணத்தை உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறி சீக்கிரத்திலேயே களைப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.