India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் கருப்பூரில் மினி டைடல் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள மினி டைடல் பூங்காவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம்,அருள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 35 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாங்கல்யம் உட்பட ரூபாய் 60,000 செலவில் இலவச திருமணம் வரும் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்; தேர்வு செய்யப்பட்ட ஜோடிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

சேலம் கருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.23) காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த டைடல் பூங்கா மூலம் 1,000- க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் இன்று ஜி.கே.வாசன் பேட்டி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தன் கட்சியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். தென் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல் வரிசை திமுக ஆட்சியில் தான். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். போதை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்றார்.

2026 சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சேலத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டிமணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.

சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டி மணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.

ஓமலூர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் கருப்பூர் பகுதியை சேர்ந்த வெற்றிவேல். இந்நிலையில் இவரது படத்தைக் கொண்டு சூனியம் செய்ய அணுகவும் என்று அடிக்கப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு நிலவியுள்ளது. இதனைதொடர்ந்து வெற்றிவேல் தரப்பில் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஓமலூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

எடப்பாடி அடுத்த காளி கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள் (80) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வள்ளியம்மாளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தியதில், வள்ளியம்மாளின் மகள் சின்னப்பொண்ணுவின் மருமகன் விக்னேஷ் (22) போதையில் பாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரைச் சேர்ந்த 31 வயதான கவிதா ஏற்கனவே 2 முறை திருமணமானவர் என்றும், 3- வது முறையாக திருமணம் செய்துக் கொண்டவர் என்பதும், வேறொருவருடன் தொடர்பில் இருந்ததால் கொலை என காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.