Salem

News October 1, 2024

சேலம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்

image

சேலம் மாநகராட்சியின் சுற்றுப்பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. கன்னங்குறிச்சி, கருப்பூர், சன்னியாசிக்குண்டு, எருமாபாளையம், அமானி கொண்டலாம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி, செட்டிச்சாவடி ஆகியவற்றுடன் இன்னும் பல ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

News October 1, 2024

அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

image

வரும் அக்.04-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலத்துக்கு வருகைத் தரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரனுக்கு திமுக சார்பில் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாநகர பகுதிகளில் உள்ள பெரியார், அண்ணா, கலைஞர், வீரபாண்டியார் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தவுள்ளார்.

News October 1, 2024

BREAKING சேலத்தில் விபத்து: 3 பேர் பலி

image

சேலம் மாவட்டம், திப்பம்பட்டியைச் சேர்ந்த சென்னன் (65) என்ற முதியவர், தனது மகள் சுதா (38), பேரன் விஷ்ணு (12) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது நாமக்கல்லுக்கு சென்றுகொண்டிருந்த லாரி மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சுந்தர்ராஜனை மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

News October 1, 2024

சேலம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில், இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News September 30, 2024

மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறவில்லை

image

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவுபெறவில்லை; சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார்; மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

News September 30, 2024

சேலம்: எம்எல்ஏ உள்பட 44 பேர் விடுதலை

image

கடந்த 2013ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (செப்.30) சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், பாமகவின் நிர்வாகிகள் உள்பட 44 பேரை விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News September 30, 2024

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

image

“இனி வருங்காலத்தில் இத்தகைய பள்ளங்களை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளின் பேரில் உச்சநீதிமன்றம் ஜாமீன் தந்துள்ளது; நிபந்தனைகளை செந்தில் பாலாஜி மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம். திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படவில்லை” என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

News September 30, 2024

சேலம்: தாட்கோ மானியத்துடன் வங்கிக் கடனுதவி

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் குறைந்த வட்டியில் வங்கிக் கடனுதவி பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது

News September 30, 2024

தங்கப்பதக்கம் வென்று அசத்திய சேலம் மாணவி!

image

பீகார் மாநிலம், பாட்னாவில் நடந்த 4வது இந்திய ஓபன் தடகளப் போட்டியில் கலந்துகொண்ட சேலம் ஏவிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பயிலும் மாணவி கோபிகா, உயரம் தாண்டுதல் பிரிவில் 1.76 மீ உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மாணவிக்கு கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

News September 30, 2024

சேலத்தில் மத்திய அமைச்சரை சந்தித்த எம்எல்ஏ

image

சேலம் உருக்காலையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியை நேரில் சந்தித்து, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கோரிக்கை மனுவை வழங்கினார். உருக்காலைக்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே திருப்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்.

error: Content is protected !!