India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் இன்று சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் என்றும் உங்களுக்கு துணையாக நிற்போம் என்று சேலம் மாநகராட்சி துணை மேயர் கூறினார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த ராமநாயக்கன்பாளையத்தில் 10ம் வகுப்பு மாணவர் அபிஷேக், தான் பயன்படுத்தி வரும் சாதாரண சைக்கிளில் 30 கிமீ வேகத்திறன் கொண்ட பேட்டரியைப் பொருத்தி, வெறும் 1 ரூபாய் செலவில் பள்ளிக்கு சென்று வருகிறார்.
பள்ளிக்கு செல்ல தினமும் 45 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக தெரிவித்துள்ள அவர், இந்த சைக்கிள் மூலம் தற்போது 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் அதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் (அக்டோபர் 1) ஒரேநாளில் ரூ.9.19 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது. தினமும் சராசரியாக ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை மது விற்பனை நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து உங்களது கருத்து என்ன மக்களே?

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (அக்.03) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடைபெறவுள்ளது. இம்முகாமில் கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியையொட்டி சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புபவர்கள் இணையதளத்தில் வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அருகில் உள்ள இ-சேவை அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி, சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (அக்.02) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட்டில் நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையான பீன்ஸ் இன்று ஒரே நாளில் 105 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பீன்ஸ் விலை சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் சற்றே கலக்கம் அடைந்துள்ளனர்.

இன்று சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டியைச் சேர்ந்த இளையராமன் (47) என்பவர் பெருமாப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில், கடப்பாரையால் நிலத்தில் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலத்தின் அடியில் இருந்த மின் கேபிள் மீது கடப்பாரை உராய்வு ஏற்பட்டு மின்சாரம் தாக்கிய நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில், சிறுத்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த பா.ம.க. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி, சசி, ராஜா ஆகிய 3 பேரை கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.2) தமிழகத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.