India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து பொது இடத்தில் நடப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று(மார்ச் 17) அதிரடியாக அகற்றினர்.
’புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில்’ கற்கும் முதியோர்களுக்கு மதிப்பீட்டு எழுத்துத் தேர்வு சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. அந்த வகையில் வாழப்பாடி அருகே அருநுாற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை ஊராட்சி கண்கட்டிஆலா பள்ளியில் நடைபெற்ற தேர்வில், முதியோர்கள் பலர் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் புஷ்பா, திட்ட தன்னார்வலர் சங்கீதா உடனிருந்தனர்.
மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை பெட்டியில் மனுக்களாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் வருகின்ற 19ம் தேதி நடக்கும் பாரதிய ஜனதா கட்சி பொதுகூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று பேச இருக்கும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் சேலத்தில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமையான இன்று வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதினால் ஆத்தூர் பிரதான சாலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் சரகத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கையின் போது அதிக வேகமாக வாகனம் ஓட்டிய 37 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 11 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 10 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 35 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 27 பேர் என 168 பேரின் லைசென்ஸ் மூன்று மாதத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது குறித்து பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7020, 0427-2450031,0427-2450032, 0427-2450035 மற்றும் 0427-2450046 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், 9489939699 என்ற வாட்ஸ்-ஆப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என சேலம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார். மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலத்தில் இன்று அதிகபட்சமாக 101.5 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் வெளியே செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று(மார்ச்.15) மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.