India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் அடுத்த 6 நாளுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்திற்கும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த 2 தினங்களாக சேலத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்ததால், புறநகர் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

அக் 29, 30ஆம் தேதிகளில் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன், மாநிலத்தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் இளையரசு, மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் சேலம் இல்லத்திற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

சேலம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்துக் கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் மிகவும் பயனுள்ள TN-Alert செயலியைப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை பதிவு செய்வதற்கான வசதிகளும் செயலியில் உள்ளன.

லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சேலம், கோவை, ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக அக்.09-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், அக்.10ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் ரயில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

சேலம் வழியாக தாம்பரம்- கோவை இடையே வாராந்தர சிறப்பு ரயில் வரும் அக்.11ஆம் தேதி முதல் நவ.29ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமையும், மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இயற்பியல் துறை பேராசிரியர், சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வாணையர் கதிரவன், முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் மற்றும் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் வரும் அக்.21ம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வரும் அக்.10ம் தேதி முதல் அக்.14ம் தேதி வரை பெங்களூரு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்காரட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் சிறுத்தை பதுங்கி அட்டகாசம் செய்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 24ம் தேதி கருங்கரடு பகுதியில் இந்த சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தொடர்ந்து கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வராக தேவி மீனாள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.