Salem

News October 16, 2024

சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி

image

தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசுகையில், “வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு ஏற்ற வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைத்து விதமான சாத்தியமான வழிகளை அரசு முயற்சித்து செய்து வருகிறது. மழை பாதிப்புகளை தமிழக அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்” என்றார்.

News October 16, 2024

ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி எம்எல்ஏ வரவேற்பு

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக சேலம் வந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் மேச்சேரியில் நேற்று மாலை நடந்த சிறந்த கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு கேடயம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, மேச்சேரி வந்த ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் வரவேற்றார்.

News October 16, 2024

சேலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (16.10.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை 16.10.24 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

தொழில் தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 94450- 06571 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

News October 15, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் அக்.19-ம்தேதி பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்டக் குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

News October 15, 2024

வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுக்கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மழைக்காலத்தில் பாதிப்புகள் நடைபெறாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
.

News October 15, 2024

வடகிழக்கு பருவமழை: அமைச்சர் திடீர் ஆய்வு

image

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை ராஜேந்திரன் இன்று (அக்.15) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சேலத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 14, 2024

சேலத்தில் இரு சிறார்கள் படுகொலை

image

சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம். பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் தலைமறைவு. நில தகராறில் சிறார்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!