Salem

News October 17, 2024

சேலத்தில் பெங்களூர் புகழேந்தி பேட்டி 

image

அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி இன்று சேலம் வந்தார் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தலில் சேலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.

News October 17, 2024

துணை முதல்வர் சேலம் வருகை குறித்து ஆலோசனை

image

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற 19ஆம் தேதி சேலம் வருகிறார். துணை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சேலம் வரும் அவருக்கு சேலம் மாவட்ட எல்லையான தலைவாசல் சுங்கச்சாவடி அருகே 20,000 மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து சேலம் கலைஞர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

News October 17, 2024

பதக்கப்பட்டியலில் சேலம் 2ஆவது இடம்

image

‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- 2024’ மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 13- ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது. பதக்கப்பட்டியலில் 151 பதக்கங்களுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 14 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களுடன் சேலம் மாவட்டம் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஈரோடு, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News October 17, 2024

தவெக மாநாடு: நாளை ஆலோசனை

image

தவெகவின் முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை(18.10.24) காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் நாளை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதால், அதுகுறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது.

News October 17, 2024

சென்னை புறப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்

image

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (அக்.17) மழை மீட்புப் பணிகளுக்காக சென்னைக்கு செல்லும் சேலம் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி அமைச்சர் ராஜேந்திரன் வழியனுப்பி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 17, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 17,196 கன அடியிலிருந்து 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 93.350 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 56.564 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

News October 17, 2024

விவசாயிகளின் கவனத்திற்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைக்கு மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை உழவர் செயலி வழியாக இ-வாடகை செயலியில் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

தந்தை பெரியார் சிலைக்கு அமைச்சர் மரியாதை

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் சிலைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சரை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் பேராசிரியர் சங்க நிர்வாகிகள், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News October 16, 2024

விவசாயிகளின் கவனத்திற்கு ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைந்த வாடகைக்கு மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், தேங்காய் பறிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை உழவர் செயலி வழியாக இ-வாடகை செயலியில் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் வரும் அக்.23 முதல் நவ.08 வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இம்முகாமில் அனைத்துத்துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கி தீர்வுகாணும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!