Salem

News March 27, 2024

சேலம்: பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

2024 சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நா.அண்ணாதுரை தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் இன்று தாக்கல் செய்தார். இதில் சேலம் நாடாளுமன்ற பொறுப்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

சேலம்: இதுவரை 18 பேர் மனு தாக்கல்!

image

சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் மேலும் கூடுதலாக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் இன்று மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

சேலத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

image

2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரம்மாக இறங்கியுள்ளன. அதன்படி, சேலம் தெற்கு தொகுதிகுட்பட்ட பகுதி, கோட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

News March 26, 2024

பத்தாம் வகுப்பு பொது தேர்வை 936 பேர் எழுதவில்லை

image

தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 181 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 43,270 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் இன்று நடைபெற்ற தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வை சேலம் மாவட்டத்தில் சுமார் 936 மாணவ மாணவிகள் எழுதவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்தார்.

News March 26, 2024

செய்வினை வைத்து மனைவியை பிரித்ததால் கொலை

image

சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே பெண்ணை கொன்று தண்ணீர் தொட்டியில் உடலை வீசிய வழக்கில், சக்திவேல் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், செய்வினை வைத்து தன் மனைவியை பிரித்ததால் கொலை செய்ததாக சக்திவேல் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 26, 2024

சேலம் – கரூர் ரயில் சேவையில் மாற்றம்

image

மல்லூர் ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வருகின்ற மார்ச் 30-ம் தேதி வரை சேலம் – கரூர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சேலம் – கரூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

News March 26, 2024

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

image

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி நீண்ட நாட்களாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News March 26, 2024

கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவர்!

image

சேலம் அம்மாப்பேட்டை வரகம்பாடி பகுதியில் அதிகாலை 3.00 மணிக்கு சாப்பாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியைத் தாக்கி கழுத்தை நெரித்து கதவில் தொங்கவிட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவி காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 26, 2024

சேலத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 43,270 பேர்

image

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (மார்ச் 26) தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயிலும் 22,089 மாணவர்கள், 21,181 மாணவிகள் என மொத்தம் 43,270 பேர் தேர்வு எழுத உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 181 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

News March 26, 2024

தலைவாசல்: ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

image

தலைவாசல் நத்தகரை டோல்கேட்டில் நேற்று(மார்ச் 25) தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ஞானப்பிரியா தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், உரிய ஆவணம் இல்லாத ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 625 இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபர் ஆத்தூர் முல்லைவாடி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!