Salem

News March 29, 2024

சேலம்: ட்ரோன்கள் பறக்க தடை

image

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரம்

image

சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், போலி மற்றும் காலாவதியான குளிர்பானங்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து குளிர்பானங்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்குமாறு சேலம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 28, 2024

சேலத்தில் 39 பேர் வேட்பு மனுதாக்கல்

image

சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உட்பட 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

News March 28, 2024

சேலம் திமுக வேட்பாளர் மனு நிறுத்திவைப்பு

image

சேலம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது வேட்பு மனு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுடன் மக்களவை தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று(மார்ச் 28) வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

News March 28, 2024

சேலம்: பிக்கப் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 12 பேர் காயம்

image

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட வடசென்னிமலை கோயிலில் நேற்று(மார்ச் 27) இரவு சப்தாவர்ணம் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று(மார்ச் 28) அதிகாலை 2 மணி அளவில் மலையில் கடை வைத்திருந்தவர்கள் பிக்கப் வேனில் கீழே வந்து கொண்டிருந்தனர். அப்போது நிலைத்தடுமாறி வேன் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்த நிலையில் பழனியப்பன் என்பவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2024

சேலத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம்

image

2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, நேற்று(மார்ச் 27) சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூடுதல் சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.

News March 27, 2024

பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவர்

image

வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், மகன் அஜித்குமார்(25). பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்துள்ளார். சான்றிதழ் பெறுவதற்காக, 2023 அக்டோபரில் மீண்டும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். அங்கு உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, இவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 27, 2024

சர்ச்சையில் சிக்கிய டி.எம்.செல்வகணபதி

image

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதிச் செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17,18 படி கிரிமினல் குற்றம் ஆகும். மேலும் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

சேலம் கோட்டத்தில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார். சேலம், பெங்களூர், சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News March 27, 2024

டீ போட்டு வாக்கு சேகரித்து திமுக வேட்பாளர்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் மலையரசன் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் டீ கொடுத்து விட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். உங்கள் ஓட்டை எனக்கு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்

error: Content is protected !!